முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை வீழ்ச்சியடையச்செய்ய முயற்சி - ஜம்மியதுல் உலமா
"இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதான அவர்களின் இருப்பு மற்றும் வர்த்தகம் மீதான பொறாமையின் வெளிப்பாடே பௌத்த பிக்குகள் சிலர் மேற்கொள்ளும் ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டங்களாகும். ஹலால் சான்றிதழ் வழங்குவதென்பது ஒரு சமய நடவடிக்கையல்ல. உணவு உற்பத்தியில் அனைத்து மதங்களும் விரும்பும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் செயலே அது.''
இவ்வாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ. முபாறக் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
உணவுப் பொருள்களை உட்கொள்ளும் எந்தவொரு மனிதனும் அவை சுகாதார ரீதியாகத் தயாரிக்கப்பட்டிருப்பதையே விரும்புகின்றான். அவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தியே நாம் ஹலால் சான்றிதழ் வழங்குகின்றோம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தான சமய ரீதியான ஏற்பாடு என்றும், இது தமக்குத் தேவையில்லை என்றும் பௌத்த பிக்குகள் கூறுகின்றனர்.
இதனை மதம் சார்ந்ததாகப் பார்க்கவேண்டாம். இது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் ஏற்பாடு. அனைத்து மதத்தவர்களும் சுகாதாரத்தையே விரும்புவர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நாம் எந்தவொரு நிறுவனத்துக்கும் கட்டாயப்படுத்தி ஹலால் சான்றிதழைக் கொடுக்கவில்லை. அந்நிறுவனங்கள்தான் எம்மிடம் தாமாகக் கேட்டு வாங்குகின்றன.
எமது ஹலால் சான்றிதழைக் குறிப்பிட்ட நிறுவனம் வைத்திருக்கும் காலமெல்லாம் நாம் எமது பிரதிநிதியை நியமித்து அந்நிறுவனத்தின் உற்பத்தியை அவதானித்துக்கொண்டே இருக்கிறோம். அவை சுகாதார ரீதியாக உற்பத்திசெய்யப்படுவதைக் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றோம்.
அநேகமான நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் இல்லாமல் உள்ளன. அவ்வாறு ஹலால் சான்றிதழ் பெறாத நிறுவனங்களின் வர்த்தகம் வீழ்ச்சியடைவதால் அவர்கள் திரும்ப வந்து சான்றிதழைப் பெறுகின்றனர். உணவுப் பொருள்கள் சுகாதார முறையிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பதை முஸ்லிம் அல்லாத சகேதரர்களும் விரும்புகின்றமையே இதற்குக் காரணம்.
உண்மை நிலைமை இப்படி இருக்கின்றபோது, ஹலால் சான்றிதழைப் பிக்குகள் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர். அவர்கள் ஹலால் சான்றிதழை மாத்திரம் எதிர்க்கவில்லை. முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் வீழ்ச்சியடையச்செய்ய முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் சிங்களவர்கள் வேலைசெய்யக்கூடாது, முஸ்லிம்களின் கடைகளில் பொருள்களைக் கொள்வனவு செய்யக்கூடாது என்று பிக்குகள் கூறுகின்றனர்.
இது உண்மையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் இருப்புக்கு எதிரான செயற்பாடாகும். முஸ்லிம்கள் மீதான பொறாமையின் வெளிப்பாடாகும். இது தொடர்பில் நாம் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்துப் பேசியபோது, இது சிறு குழுவொன்றின் செயற்பாடு.
இதனால் பெரும் விளைவுகள் ஏற்படாது என்றும் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினர். முஸ்லிம்கள் இந்த விடயத்தில் அமைதி காக்கவேண்டும். பொறுமையுடன் மிகவும் சுலபமாக இப்பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
அதேவேளை, அனைத்து சிங்கள மக்களும், அனைத்து பௌத்த பிக்குகளும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த செயற்பாட்டில் ஈடுபடவில்லை. ஒரு சிறு குழு மாத்திரமே இந்தச் செயலில் ஈடுபடுகின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றார்.
ஜம்மியத்துல் உலமா சபை இவ்வாறு தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கின்றார்கள் .இது ஒரு கு ழுவினால் ஏற்படும்
ReplyDeleteபிரச்சினையாகும் என்று .உண்மையில் அவ்வாறாயின் அரசாங்கம் இதற்க்கு ஆரம்பத்தில் முடிவு எடுத்திருக்க வேண்டும் .தம்புள்ளை பள்ளிவாயல் உடக்கப்பட்டபோதே அங்கு தீவிரமாக செயற்பட்ட பிக்குகளை ஒன்றும் செய்யவில்லை .நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அணைத்து சம்பவங்களும் அரசாங்க ஒத்துளைபுடனே நடக்கின்றது .பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் பொலிசாரால் பதிவு செய்யப்படுவதில்லை .ஒரு சமுதாயத்தின் அடக்குமுறைமை தெளிவாக தெரிகின்ற போது அரசாங்கம் இதனை சர்வதேயபடுதவிடாமல் சிறுகுழு என்று சொல்லிக் கொண் டுடிருக்கின்றது .இதுவரை பாரளமன்றத்தில் இப்பிரச்சினை முஸ்லிம் அமைச்சர் ஒருவரால்கூட பேசப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை
தம்பி லாபீர் , பாராளுமன்றத்தில் இருக்கிற முஸ்லிம் அமைச்சர்கள் எல்லாம் சீட்ட சூடாக்க வண்டவனுகள் மட்டும் தான.இந்த பிரச்சினயப்பத்தி எவனாவது பெசியிருக்கானுஹலா? இல்ல ....(புவாத்)
ReplyDeleteஇன்றைய சிறு பிரச்சினைதான் நாளை பெரும் பிரச்சினையாக மாறும்.....இவைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்....
ReplyDeleteenge ASWAR , ATHAVULLA ?>>>>>>>>>>>> ENTHA SEAT IL MAYANGI KIDAKKURAANUKAL ???
ReplyDeleteAllah Akbar
ReplyDeleteithu vidayaththil Muslim Thalaimaihal Thodarnthum mounam kaththal Ethir vilaivuhalai intha samookam nichchayam santhiththe theerum. Appadi oru nilai etpattal enathu iruthi sottu iraththam intha mannil urayum varai poradathayanga matten ena ovvoru muslimum thuninthu elunthu nitka vendum. EMATHU UYIR UDAMAIHALUKKAHA PORADI UYI NEETHTHALUM NAMUM SHAHEED ENDRA ANTHASTHODU MARANIPPOM.INSHA ALLAH. ELUNTHU VIDU ILAINJANE...... THUNINTHU SOL...... MUSLIMKAL ONDRUM KOLAIHALALLA. ALLAHU AKBAR.
ReplyDeleteஹலால் சான்றிதழுக்கு எதிராக பல போலியான தகவல்கள் வெளியிடப்படுகின்றது
ReplyDeleteவிலை அதிகரிப்புக்கு காரணம் என்றும்
100 கோடி வருமானம் பெறுகின்றார்கள் 4500 கம்பனிகள் பதிவு பெற்றுள்ளனர் இன்னும் பல
இது சம்பந்தமாக ஜம்மியதுல் உலமா சபை ஏதேனும் விபரங்கள் வெளியிட்டு உள்ளதா?