வடமாகாண தமிழ் தலைவர்களுக்கு...!
(M .A .M . நளர்)
1990 இல் நிராயுதபாணியான முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்துவிட்டு அதன் பின்னர் வடமாகனத்தின் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் அணைத்து வளங்களையும் சூறையாடியது யார் ?
வடமாகாணத்தின் தமிழ் மக்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அனைத்து நிறுவனங்களும் உதவி வருகின்றன, ஆனால் முஸ்லிம்கள் பழைய அகதிஎன்று அடையாளப்படுத்தப்பட்டு சகல விதமான நிவாரணங்களில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். வன்னி மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்ல அவர்களால் முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் இல்லை , அத்துடன் மன்னாரில் இயங்கும் அணைத்து நிறுவனங்களும் சங்கங்களும் தமிழர் சார்ந்தவையாகவே உள்ளன, மன்னாரில் உள்ள சகல குடும்பங்களும் ஏதாவது ஒருவகை நிவாரணத்தை பெற்றே உள்ளார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கென்று ஏதாவது ஒரு உதவி கிடைக்கும்போது மட்டும் தமிழர்களுக்குரிய அனைத்தும் முச்ளிம்களுக்க் மட்டுமே பகிரப்படுவதாகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ் ஊடகங்களும் கொக்கரிக்கின்றன.
புலிகள்தான் எங்கள் தலைமை என்று சொல்பவர்களும் தமிழ் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். வடமாகாண முஸ்லிம்களை பொருத்தமட்டில் அவர்களுக்கான முழு நிவாரணத்தையும் கௌரவத்தையும் வழங்க வேண்டியது அங்குள்ள தமிழர்களின் கடமை, காரணம் வடமாகாண முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்து அவர்களை அகதியாக்கியவர்கள் புலிகள்தான்.ஆனாலும் முஸ்லிம்கள் அதை ஒரு கெட்ட கனவாகவே நினைத்து இன்றும் தமிழர்களுடன் சந்தோசமாக வாழ்கிறார்கள். அதை விரும்பாத அல்லது அதைவைத்து அரசியல் செய்ய முனைவோர் அங்குள்ள தமிழ் மக்களிடம் இருந்து முஸ்லிம்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.மன்னாரில் உள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை எதிர்ப்போரிடம் பின்வரும் விடயங்களை சிந்தித்துப்பார்க்குமாறு வேண்டுகிறேன்.
* முஸ்லிம்கள் வெளியேறிய பின் அவர்களின் காணிகளுக்கு என்ன நடந்தது
* அது அடிமட்ட விலைக்கு வாங்கப்பட்டது.
* அதில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடியமர்ந்தார்கள்/ அமர்த்தப்பட்டார்கள்
*அரச காணிகள் எல்லாம் தமிழர்களுக்கு அரச அதிகாரிகளினால் பகிரப்பட்டன
* முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளில் தமிழர் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது
* முஸ்லிகளின் பெரும் தோட்டங்கள் குறைந்த விலைக்குvவாங்கப்பட்டு/ பறிமுதல் செய்யப்பட்டு குடியேற்றம் இடம்பெற்றது
* வேலை வாய்ப்புகள், அரச நிறுவனங்களில் தற்காலிக இடங்கள் நிரப்பப்பட்டன பின்னர் அவை நிரந்தரமாக்கப்பட்டன
* அரச சார்பற்ற நிறுவனங்களின் 99 வீதமான நியமங்கள் தமிழர்களுக்கே வழங்கப்பட்டன, அதன் நிதிகூட இவ்வாறே வழங்கப்பட்டன .
* மன்னாரில் பெரும் வர்த்தகர்களாக இருந்த முஸ்லிம்கள் பாதையோர வியாபாரிகளாக மாற்றப்பட்டார்கள்
* ஆண்டானுகாலமாக உப்புக்குளத்தில் முஸ்லிம்களே 95 வீதமானோர் வாழ்ந்தனர் ,ஆனால் அது முஸ்லிம்களின் கிராமமல்ல என்று சண்டியர்களால் பிரகடனபடுதுமள சென்றுவிட்டது
* முஸ்லிகளுக்கு உரிய மீன்பிடி துறைமுகம் அந்நியர்களால் ஆக்கிரமப்படுத்தப்பட்டது,அதற்காக நீதி கேட்டு சென்ற மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அநீதியாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மாதக்கணக்காக சிறைவைக்கப்பட்டார்கள்
* மேற்படி ஆர்ப்பாட்டத்தின்போது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நடுவே தொடர்பாளர்களாக இருந்த மன்னார் அல்- அஷ்கார் பாடசாலை அதிபர்,.பிரதிஅதிபர் . உதவி அதிபர் போன்றோர் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு பாடசாலை கல்வி நிலை சீர்குலைக்க முயற்சி ஏற்படுத்தப்பட்டது
* தனது தொகுதி மக்களின் பிரச்சினை தொடர்பாக பேச வந்த அமைச்சர் குற்றவாளியாக்கப்பட்டு அது அரசியல் பிரச்சினையாக்கப்பட்டது
* தமிழ் ஊடகங்களில் வடமாகண முஸ்லிம்களுக்கெதிரான மற்றும் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன
* முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிசாத் உதவுகிறார் என்று ஒப்பாரி வைக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது முஸ்லிம்களுக்கென்று தங்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் ஏதாவது செய்துள்ளீர்களா ? நீங்கள் முஸ்லிம்களை அகதியாகியத்தையும் நியாப்படுத்துகிரீர்கள் அந்த அகதிகளுக்கு கிடைக்க வேண்டியவைகளில் சில வீதங்கள் கிடைக்குபோது அதையும் எதிர்கிறீர்கள் இது என்ன நியாயம
பெரும்பான்மை மக்கள் தமிழர்களுக்கு அநீதி செய்கிறார்கள் என்று நீதி கேட்கும் நீங்கள் அதே குற்றத்தை செய்ய முனைவது நியாயமா? தென்னிலங்கை பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் சிங்கள மொழியால் இணைந்ததுபோல, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைய முடியாமைக்கான காரணங்களை ஆராய முற்பட்டால் மேலே சொன்ன பலவிடயங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
இவ்வாறு குற்றங்களையும் குறைகளையும் அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் வடமாகாண முஸ்லிம் மக்கள் தம் தாயக சகோதர கத்தோலிக்க மற்றும் இந்து மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள். அதை சாதாரண தமிழ் மக்கள் அறிவார்கள்
இடம்பெயர்த்தப்பட்ட முஸ்லிம்களை அரவணைக்கவேண்டிய பொறுப்பு தமிழ் தலைவர்களை சார்ந்தது அதைவிடுத்து முஸ்லிம்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை விமர்சனம் செய்வதும் இனரீதியாகப்பார்ப்பதும் இன ஒற்றுமைக்கு வேட்டகவே அமையும்...!
Post a Comment