Header Ads



குருநாகலில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியில் முப்படையினர் (படங்கள்)


(இக்பால் அலி)

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் வாரியப்பொல மற்றும் மாஸ்பொத பிரசேயலாளர் பிரிவில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாஸ்பொத்த என்ற இடத்தில் மாகுறுஓய ஆறு   வெள்ளப் பெருக்கெடுத்துள்ளதால் மீட்க முடியாமல்  பல குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். 

பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மற்றும் பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எடுத்த உடனடி நடிவடிக்கையின் பிரகாரம் மாஸ்பொத என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்குண்ட இரு சிறு பிள்ளைகள் வான் படையினரின் மூலம் ஹெலிக் கொப்டர் மூலமாக மீட்கப்பட்டுள்ளது. 

மாஸ்பொத பிரதேச செயலாளர் பிரிவில் அலுத்பொதகம என்ற இடத்தில் 110 குடும்பங்கள் வீடுகள் மூற்றாக வெள்ளத்தில் முழ்கின. இதில் 24 குடும்பங்களை வெள்ளத்திலிருந்து மீட்க முடியாமல் சிக்குண்டிருந்தனர். இவர்களை கடற்படையினர் மற்றும் பொலிஸார் சேர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்;டனர். குருநாகல் பொலிஸ் பிரிவில் கொக்கெட்டுவ என்ற பிரதேசத்தில் சுமார் 32 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர். இரவுவேளை எனவும் பாராமல் இங்கு சிக்குண்டுள்ளவர்களை கடற்படை மற்றும் பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

குருநாகல் நகர் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மற்றும் குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், வடமேல் மாகாண விவசாய அமைச்சர் டி. பீ ஹேரத் ,குருநாகல் பிரதேச சபைத் தவிசாளர் பெட்ரிக் கருனாசிங்க, குருநாகல் பொலிஸ் உயர் அதிகாரிகள், குருநாகல் அனர்த்து முகாமைத்துவ நிலைய அதிகாரிகள்  சென்று மக்களுக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

இந்தப் பிரதிநிதிகள் வெள்ளத்தில் சிக்குண்டவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட படையினருக்கு தேவையான ஒத்துழிப்பையும் பங்கைளிப்பையும் நெரில் சென்று வழங்குவதைப் படங்களில் காணலாம்.

அதேவேளை கொழும்பு குருநாகல் வீதியில் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சமீபத்திலலுள்ள பாலம் உடைந்துள்ளதால் பாதை மூட்பட்டுள்ளன. பாலம் திருத்தவேலைகள் தற்போது துரிகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவ் வைத்தியசாலையில் சுமார் 12 வாட் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை கொழும்பிலிருந்து  வருகை தந்த அவசரப் பிரிவினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று மாலையிலிருந்து இரவு 10.30 மணி வரை எவ்வித மழையும் பெய்யவில்லை.










No comments

Powered by Blogger.