மதுரங்குளியில் இப்படியும் நடைபெற்றது..!
மதுரங்குளியில் தும்புத் தொழிற்சாலை வைத்திருக்கும் ஒரு சகோதரரின் வீட்டில் நடந்த நுாதன திருட்டு சம்வம் இது.
சகோதரரின் வீட்டுக்கு அருகாமையிலேயே தொழிற்சாலையும் இயங்கிவருகின்றது. அவரது தொழிற்சாலையில் பணியாற்றும் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு இவர் வீட்டுக்கு பக்கத்திலேயெ தங்கி இருப்பதற்கான வசதியையும் செய்து கொடுத்திருக்கின்றார் இந்த நல்ல மனிதர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவரது அந்த பளியாளர் தனது பிள்ளையின் பிறந்த நாள் வைபவம் என்று சொல்லி சிறியதொரு ஏற்பாடு செய்திருக்கின்றார் கேக்,வாழைப்பழம்,ஜூஸ் என்று மாலை 5.30 மணியலவில் முதலாலியின் வீட்டுக்கு கொண்டு போய் கொடுத்திருக்கின்றார்.
இவர்களும் சாப்பிட்டுவிட்டு கண் விழித்தது மறு நாள் தானாம்.
நடந்த சம்பவம் என்ன வென்றால் அந்த பனியாளர் கொடுத்த ஜூஸ் பானத்தில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு வீட்டிலிருந்த பணம்,பொருள் நகை எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு அவர்கள் தலை மறைவாகிவிட்டார்களாம்.
சகோதரர்களே! இது எல்லோருக்கும் படிப்பினைக்காகவே சமர்ப்பிக்கின்றேன்.
Post a Comment