Header Ads



பதுளையில் முஸ்லிம் வீடுகளில் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவங்கள்...!


(இக்பால் அலி)

பதுளையில் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பங்வங்கள் நடைபெற்று வருதாகத் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக மூன்று  முஸ்லிம் வீடுகளில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

முஸ்லிம் தனவந்தர்கள் வியாபாரிகள் இலக்குவைத்தே இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

19-12-12 பதுளைபிடியவிலுள்ள புதளை ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுபபினரும், தங்க நகை வியாபாரியுமான பசால் என்பவரின் இல்லத்திற்கு  நள்ளிரவு வேளையில்   இராணுவ உடை தரித்து தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகக் கூறி வீட்டினுள் நுழைந்த நால்வர் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை எடுத்துச் சென்றதுடன் அடுத்த நாள் காலை பதுளைப் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் பதிவு செய்யவருமாறு  எனக் கூறி  சென்றுள்ளனர். மறுநாள் காலையில் பதுளைப் பொலிஸில் இது விடயமாக பிரஸ்தாபித்த போது பொலிஸிலிருந்து எவரும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதன்  பின் இது குறித்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-12-12 அன்று பதுளை லக்கி ஹாட்வெயார் ஜெமீல் ஹாஜியார் இல்லத்திற்கு இரவு வேளையில்  உள்நுழைந்த கொள்ளைக்காரர்கள் சுமார் 80.000 ரூபா பெறுமதியான பணத்தையும் கையடக்கத் தொலைபேசி இரண்டையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆழ்ந்த நித்திரை கொள்ளும் வகையில் ஒரு திரவம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பதுளைப் பொலிஸில் முறைபாடு தெரிவித்துள்ளனர்.

பதுளைபிடியவில் 18-12-12 அன்று இரவு 8.15 வீட்டுக்குள் நுழைந்த  இரு இளைஞர்கள்  அங்கியிருந்த பெண்மணியை அச்சுறுத்தி  இரு காதப்பூ மாலை, காப்பு ஆகியவற்றை கலட்டீக் கொண்டு கூர்மையான கத்தியால் கையில் காதில் நெஞ்சில் கீறி விட்டுச் சென்றுள்ளனர். விசேடமாக காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்மணி பதுளைப் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு தெரிவித்த வேளையில் ஆளடையாள அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது சுமார் 12 நபர்களை அடையாளம் காட்டப்பட்டது இதில் எவரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்படையவர் அல்லர் என அப்பெண்மணி சாட்சியமளித்துள்ளார்.

கொள்ளையர்களை என்னால் அடையாளம் காட்ட முடியம் எனக் கூறும் அவர் 22,23 வயது மதிக்கத்தக்க வாலிபர்களே  இதில் தொடர்புடையவர்கள் என பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். இவரின் கருத்துப்படி பரம்பரையான கொள்ளை நடவடிக்கையில் ஈடுபாட்டைக் கொண்டவர்கள் அல்ல. இவர்களிடம் கொள்ளையர்களுடைய நடை உடை பாவணை எதுவும் இவர்களிடம் காணப்பட வில்லை அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

இங்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பங்களை நோக்குகின்ற போது திட்டமிட்ட சதி முயற்சி ஒன்று நடந்து கொண்டிருப்பதாக மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர் இது குறித்து மலையக கல்வி மாநாட்டின் இணைச் செயலாளர் ஏ. எம். எம். முஸம்மிலிடம் வினவிய போது,,

இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்ளைப் பார்க்கின்ற போது இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் ஒரு பின்னணி இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது பதுளையிலேயே  முஸ்லிம்களுக்கு எதிராக சதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக சந்தேகிக்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம் கடைகளில் பொருள்களை வாங்கம் வேண்டாம் மற்றும் இன்னொரன்ன முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களாகத்தான் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.