தமிழ்மொழியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து தமிழ்மொழிப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 05.12.2012 அன்று அக்கரைப்பற்று தேசிய பாடசாலையான முஸ்லீம் மத்திய கல்லூரியில் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம்.காசீம் அவர்கள் பிரதம அதிதியாகவும், கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். சகாப்பதீன், தமிழ் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹனீபா இஸ்மாயில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், தமிழ்பாட ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கடந்த 2010, 2011, 2012ஆம் ஆண்டுகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து தமிழ்மொழிப் போட்டி நிகழ்வுகளில் குறிப்பாக தமிழ்த்தினப் போட்டிகளில் அதிவிசேட திறமை காட்டி தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அதில் பரிசு பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலயத்தின் தமிழ்பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹனீபா இஸ்மாயில் தெரிவித்தார். அத்துடன் கடந்த க.பொ.சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளின்போது மாணவர்களின் அடைவுமட்டத்தின் பெறுபேறுகள் பற்றிய விளக்கங்களுடன்கூடிய கையேடும் வெளியிடப்படவிருக்கின்றது. கடந்த வருடங்களில் அக்கரைப்பற்று வலயத்தின் தமிழ்மொழிப் பாடத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் ஒரு அங்கமாக இந்நிகழ்வு இடம்பெறுகின்றது எனவும் உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) ஹனீபா இஸ்மாயில் தெரிவித்தார்.
Post a Comment