இருள் சூழ்ந்த வாழ்க்கை...! (அரபு நாட்டில் நம்மவர் நிலவரம்)
(கட்டாரிலிருந்து பாயிஸ்)
சுட்டெரிக்கும் சூரியனும்
குரல் இறுக்கும் கடும்
குளிரும்
பழகிப்போய்விட்டது.
”என்னடா மச்சான்
முகம் ஒரு மாதிரி”
அவன் மட்டும் உணர்கின்றான்
உண்மை நிலவரத்தை
இரத்த பந்தம் கிடையாது
மாமனுமில்லை
மச்சானுமில்லை
துன்பத்திற்கு
தோள் தருவான்
பாலைவன மண்ணில்
பாசம் காட்டுவது
பாஸ்போர்ட் நண்பர்கள்.
மட்டும்.
ஓலைக்குடிசைக்கு
ஓடு போட்டு
அலங்கரிக்கத்தான் -நாம்
இங்கு வந்தோம்.
எங்கள் வீட்டுக்குள்
மட்டும்தான்
பகலிலும் தெரியும்
பல நிலவுகள்
ஓலைக்குடிசையின்
ஓட்டை வலியே!..
எமது வாழ்க்கையில்
நாம் இழந்தவை ஏறாளம்.
மனைவியின் பாசத்தை
எஸ்எம்எஸில் கானுகின்றோம்.
குழந்தைகளின் அரட்டைகளை
ப்ஃரிங்க் வழியே
கேட்கின்றோம்.
ஸ்கைப்பில் பார்கின்றோம்
தன் கரு சுமக்கும் தாரத்தின்
தனிமையின் கொடுமையை.
வீடியோவைக்
கட்பண்ணி
கொஞ்சநேரம்
அழுதுவிட்டு
ஆறுதல்தான்
சொல்லுகின்றோம்.
இன்னும் சிலரோ
கர்ப்பினியான -தன்
மனைவியின்
தேவைகளை
சரியாச்செய்திடாத
பாவிகளாய்
இருக்கின்றோம்.
வயதான
தாய் தந்தையை
வசதியாய் பார்த்துக்கொள்ள
முடியவில்லை.
பாடசாலை பையனுக்கு
பெற்றார் கூட்டம்
அம்மாவுக்கு சுகமில்லை
அப்பாவும் நாட்டிலில்லை.
நாளுவயசுப்பிள்ளைக்கோ
நாளு இடம் போக ஆசை
நா சுழற்றிக் கேட்கின்றான்
”அப்பா வரட்டும்”
அம்மாவின் ஆறுதல்.
பாவம்
அவளுக்குத் தெரியவில்லை
அவர் எப்ப வருவார் என்று.
வறுமைக்கு
இங்கு வந்தோம்
பொறுமைக்கு
தாயை மிஞசிவிட்டோம்
சிறு வலிதான் வந்தாலும்
போர்த்திப்படுத்த நாங்கள்
கடுங்காச்சல் வந்தாலும்
பொடுபோக்காய்
போகின்றோம்
வேலைக்கு...............
காரணம்
நாம் ஓப்ஃ என்றால்
நம் சம்பளத்துக்கல்லவா
ஆப்பு.............
கடமைகளைச் செய்கின்றுாம்
காசு கிடைக்குமென்றால்
கக்கூசும் கழுவுகிறோம்.
கரல் பிடித்த சைக்கிலிலே
கால் மிதிக்க
சென்ற நாங்கள்
காரல்லா காரினிலே
கால் பதித்து
ஓட்டுகிறோம்.
சொந்தமாய் வாங்கி ஓட்ட
சொர்க்கத்துக்குதான்
போகவேனும்.
நாலு சக்கர வண்டியில்
நன்றாக திரிகின்றோம்
நாட்டுக்கு போனால்
நாங்கள்..............
மாட்டு வண்டி வாங்க
நாலு பணமிருக்குமோ
தெரியவில்லை.
எங்கள் பயனம்
பக்கத்திலுமில்ல
எங்கள் வாழ்க்க
நிச்சயமுமில்ல
காலநிலையோடு
போராடி
ஓடுகிறோம்
காசு சேர்க்க...
ஆளுக்கொரு ரூமில்
அடம்பிடித்து வாழ்ந்த
நாங்கள்
ஆரடி ரூமுக்குள்ளே
நாளு கட்டில்
கட்டிலுக்கு ரெண்டுபேரு
அனுபவித்துப்பார்கின்றோம்
பழகிப்போனது.
ஒரு பிடி சாதத்தை
வாய்க்குள் வைக்கும்போது
பிள்ளைகளின் ஞாபகம்
தொண்டையை
இறுக்குகிறது.
கவலைகள் பொங்கி
வெடித்து சிதறும்போது
கலிவரைக்கு ஓடுகிறோம்
யாரும் பார்க்காமல்
அழுதுவிட்டு வருவதற்காய்.
கஸ்டத்துக்கு தானே -நாம்
இங்கு வந்தோம்
நாம் கவலைப்பட்டால்
நமக்கென்னலாபம்
நம் குடும்பம்
நல்லா இருக்கனுமே!
என்று
நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும்
ஆறுதல்.
தானே சமைத்து
தானே உண்ணும் போதுதான்
தம்பிக்கு தெரிகிறது
தாயின் அருமையும்
தாரத்தின் பெறுமையும்.
ஊரிலே போய்
நிம்மதியாய் வாழ
எல்லோறுக்கும் ஆசைதான்
ஆனால்
இன்னும் எம்மை
பிரச்சினைகள்
துரத்திவந்தால்?
காரோடு சேர்த்து
ஓட்டுகிறோம்
காலத்தையும்.
விடியல்கள் வருகிறது
ஆனால்
எமக்கு இன்னும்
விடியவில்லை.
தொடர்கிறது -எமது
இருள் நிறைந்த
பயணம்.
Post a Comment