ரவூப் ஹக்கீம் மீது பாயப்போகும் சிங்கள இனவாதம்
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன ரீதியாக செயற்பட்டதாகத் உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையின் போது இன ரீதியாக செயற்பட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான முஸ்லிம்கள் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர் என தேசிய புத்திஜீவிகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ்,சிங்கள மாணவர்கள் பல்கலைக்கு தெரிவதில் வீழ்ச்சி!
ReplyDeleteபல்கலைகழகங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தெரிவாவதில் வீழ்ச்சு ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலவச கல்விக்கு கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுகின்றது. அந்த இலவச கல்வியில் கற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை, தொழில் வாய்ப்புக்கு ஏற்றவகையில் கற்றவர்களும் நாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் ...இதற்கு என்ன சொல்ல போகிறார்களோ