Header Ads



அக்குறணையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லண்டனில் உதவி சேகரிப்பு


அக்குறணை அனர்த்த நிவாரணக் குழுவின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய இராச்சிய (UK) குரோலியில் (Crawley) அமைந்துள்ள அக்குறணை ஹெல்பிங் ஹேன்ட்ஸ் முன்னெடுத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

அக்குறணை மக்கள் அதிகளவில் வாழ்கின்ற குரோலியிலிருந்து, இந்த முன்னெடுப்பு எமக்கு பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அக்குறணை மக்களின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் காட்டுமுகமாக, குரோலியின் வாழ்கின்ற அக்குறணை சகோதரர்கள் அனைவரும் இம்முயற்சிக்கு தங்களது பூரணமான ஒத்துழைப்பை வழங்குவீர்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். இந்த இக்கட்டான நிலையில், நீங்கள் ஒவ்வொருவரும் முன்னெடுக்கின்ற முயற்சிகளுக்கு அல்லாஹ் நிரப்பமான கூலியை வழங்குவானாக!

ஐக்கிய இராச்சியத்தில் வாழ்கின்ற சகல சகோதரர்களும் இது தொடர்பான மேலதிக விடயங்களை Akurana Helping Hands  Crawley Uk 0044 7778997677 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இதேபோன்று லெஸ்டர், லன்டன் போன்ற பிராந்தியங்களிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவைகள் தொடர்பாக விரைவில் அறியத் தருவோம். இன்ஸாஅல்லாஹ்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு போன்ற ஏனைய நாடுகளில் வாழ்கின்ற சகோதரர்களும் சில முன்னெடுப்புக்களை மேற்கொள்வார்கள் என நம்புகின்றோம். அவை தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு

அக்குறணை அனர்த்த முகாமைத்துக் குழு
அஸ்னா மத்திய பள்ளி
அக்குறணை.
0094 779850360
0094 777-842849 (இர்பான்)



No comments

Powered by Blogger.