இனவெறியன் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இர்பான் பதான் தேர்தல் பிரச்சாரம்
குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல் டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று முடிவடைந்த நிலையில் ராகுல் காந்தி, அத்வானி என பிரபலங்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் குஜராத் முதல்வர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கெடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பேரணியில் நரேந்திர மோடியுடன் இர்பான் பதானும் கலந்து கொண்டுள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைக்கு 182 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அடிப்படை சூத்திரதாரிதான் இந்த நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.inneram
Post a Comment