அகத்தி முறிப்பான் எழுதிய அதிசய நீரூற்று ஸம்ஸம்
(இக்பால் அலி)
கலாபூசணம் அகத்திமுறிப்பான் அஷ்ஷெய்ஹ் செய்னுதீன் எஸ் பரீத் எழுதிய அதிசய நீரூற்று ஸம்ஸம் நூலின் வெளியீட்டு விழா அண்மையில் முதூர் பஸார் ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு நிகழ்வில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை நாட்டைச் சேர்ந்தவரும் சவூதி அரேபியாவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி அஷ்ஷெய்ஹ் எ. ஆர். எம். சாதிஹான் ஷய்லானியிடம் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்ஹ் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி வழங்கி வைப்பதையும் நூலாசிரியர் அகத்தி முறிப்பான் அருகில் நிற்பதையும் மூதூர் நத்துவத்துல் உலமா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ;nஷய்க் அப்துல் கரீம் அஷ்ஷெய்ஹ் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனியிடமிருந்து நூலொன்றைப் பெற்றுக் கொள்வதையும் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் எ. எல். கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட பல பிரமுகர்கள் காணப்படுகின்றன.
இந்நிகழ்வில் நூல் பற்றி அறிமுகவுரை நிகழ்த்திய அஷ்ஷெய்ஹ் என். பீ. எம். ஜுனைத் மதனி பேசுகையில்,,
இந்நூல் ஜம்மியதுல் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் வெளிக் கொணரப்பட்டுள்ள மிகவும் பயனுள்ள நூலாகும். உலகில் வாழும் பல இலட்சக் கணக்கான மக்கள் புனித மக்கா நகர் சென்று திரும்பும் போது சுமந்து வந்து தமது உறுவுகளை உற்சாகப்படுத்தும் பானமாக இதன் வரலாறு அதிசயமும் ஆச்சரியத்தக்கதாக விளங்குகின்றது. இந்த வரலாற்றுப் பேருண்மையை நினைவு படுத்தவும், அதன் மூலம் மக்கள் பயன்பெறவும் அல்லாஹுதஆலா வற்றாத நீரூற்றை வெளிப்படுத்தி , வற்றாத அவன் அருளையும் அருளியுள்ளான்.
அவனது அருளும், அற்புதமும் நிறைந்த ஸம்ஸம் நீரூற்றின் ஆரம்பம் முதல் இன்றைய அதிசயங்கள் வரையான நிகழ்வுகளை மிக அழகாக இந்நூல் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
தமிழ் எழுத்துலகுக்கு மிகப் பரிச்சயமான வரலாற்றுச் சம்பவங்களை மிக அழகாக அனைவரும் விளங்கக் கூடிய வகையில் இந்நூலை திறன்பட எழுதியுள்ளார் நூலாசிரியர் செய்னுதீன் எஸ். பரீத். ஸம்ஸம் நீர் பற்றி தமிழில் தரமான ஒரு நூல் வெளிவரவில்லையே என்ற இடைவெளியை இது பூரணப்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment