Header Ads



ஏறாவூரில் தேசிய சுகாதார வாரம் அனுஷ்டிப்பு

(ஏ.எச்.ஏ ஹுஸைன்)

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சிரமதானப் பணியும் தோல் நோய் வைத்திய முகாமும் செவ்வாயன்று இடம்பெற்றது.

விஷேட தோல் நோய் வைத்திய நிபுணர் என்.தமிழ்வண்ணன் தலைமையில் வைத்தியர்கள் பாத்திமா ஸபீனா, சுப்சினா சுசில், குளோடியா ரதி உள்ளிட்ட தோல் நோய் வைத்திய நிபுணர் குழுவினர் இந்த வைத்திய முகாமை நடத்தினர்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம்.எச்.எம் தாரிக் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடமாடும் தோல் நோய்ச் சிகிச்சையில் இரு நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 






No comments

Powered by Blogger.