Header Ads



றிசானாவும், மபூஸாவும் - அமானித மோசடிக்காரர்களும்..!



(பாஜி)

இஸ்லாமிய அரசியல் என்பது  இறையச்சத்தின் தளத்தில் இருந்து நோக்கப்படவேண்டியதொன்றாகும். உலகம் இன்று பின்பற்றுகின்ற அரசியல் ஜனநாயகம் உண்மையானது அல்ல.தேர்தல் காலத்தில்  மக்களுக்கும், அரசியல்வாதிக்கும் இருக்கும் நெருக்கம் தற்காலிகமானதும் மிகக்குறுகிய காலம் கொண்டதுமாகும். 

வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றபடாத சந்தர்பங்களில், சமூககட்டமைப்புக்கு பாதகம் ஏற்படக்கூடிய சந்தர்பங்களில் மாற்று நடவடிக்கைக்கு நீண்டகால இடைவெளி தேவைப்படுகிறது.இது ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது பொருத்தமற்றது. "மக்களால் ஆளப்படுதல்"  என்பது தேர்தல் நாள் வரைக்கும் மாத்திரமே வலுவானது. மிக அதிகமான அளவில் ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய பங்கீட்டு  உரிமை சரியானமுறையில் செல்வதில்லை.

ஆனால் ஒரு முஸ்லீமின் அரசியல் பயணம் என்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பின் மேல் கயிறு கட்டி நடப்பது போன்றுதான்.தலைமைத்துவம் என்பது அமானிதமாகும்.  இதை முஸ்லீம்கள் அறியாதவர்கள் அல்ல. இங்கு ஜனநாயகம் என்பது இறைவனுக்கு  பொறுப்பு கூறும் தன்மைகொண்டது. இது தலைவர்களுக்கு மாத்திரமல்ல வாக்களித்து சாட்சியம் கூறும் தனிபட்டவர்களும் உள்வாங்கப்படுவார்கள். இஸ்லாமிய வரம்புகளை மீறி செயற்படுபவர்கள் முஸ்லீம்களின் அரசியல் பிரதிநிதியாக ஒருபோதும் இருக்கமுடியாது. 

இன்று சில முஸ்லீம் என்று கூறும் அரசியல்வாதிகள் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பங்குகளை தங்களுடைய மூன்றாவது தலைமுறைக்காய் பதுக்குவது நெருப்பை உண்பது போன்றது என்பதை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. தலைமைகள் தான்சார்ந்த சமூகம் பற்றி கனவு காணவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவ பண்பு. மேலும் முஸ்லீம் இளையவர்களைகளை போதைக்கு அடிமையாக்கி வன்முறைகளை தூண்டுகின்றவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பது அருவருப்பான சமூக சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

பல ஊர்களில்  புறத்தோற்றத்திற்காய்  எழுப்பப்படுகின்ற கட்டிடங்களுக்கு பின்னால் பலரின் வறுமை மறைக்கப்படுகிறது.போடப்படுகின்ற வீதிகளுக்குள்ளே பல  உண்மைகள் புதைக்கபடுகிறது.சில அரசியல் வாதிகளின் மனசாட்சி இதை மறுக்காது. அல்லாஹுவுக்கு பயந்தவர்களாக இருப்பார்களானால் பங்கீடுகள் சேர வேண்டிய  இடத்திற்கு சேர்ந்திருக்கும்.  பல றிசானாக்களின் எண்ணிக்கை மத்திய கிழக்கில் குறைந்திருக்கும். வறுமையின் முகவரியை சுமக்கும் பல பொத்துவில் "மபூஷா"க்களின்   ஏக்கப்பெருமூச்சு தணிந்திருக்கும். மனிதனுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவது இறைவனின் சோதனையாகும்.அமானித மோசடிக்காரர்களுக்கும், அவர்களுக்கு சாட்சியம் சொல்பவர்களும் இறைவனின் பிடியில் தப்பிவிட முடியாது. 

ஒரு சிறந்த சமூகமொன்றை கற்களாலும் மண்ணினாலும் மாத்திரம்  கட்டியெழுப்ப முடியாது. வறுமைக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் அதிக முதலீடுகள்  மேற்கொள்ளப்படவேண்டும். 

2 comments:

  1. Very very good article
    For the time being the situation is analogous to
    Thank you very much. Jaffnamuslim.com

    ReplyDelete
  2. var var good mashah allahah

    ReplyDelete

Powered by Blogger.