Header Ads



இவருக்கு தண்டனை வழங்க முடியாதாம்..!


பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் தலைவராகவும் அதிபராகவும் இருப்பவர் ஆசிப் அலி சர்தாரி. அதிபர் பதவி வகிப்பவர் அரசியல் கட்சியை சாராதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சமின்றி செயல்பட முடியும். எனவே, கட்சி பதவியை அவர் ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி லாகூர் ஐகார்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கட்சி பதவியை ராஜினாமா செய்ய கடந்த ஆண்டு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கட்சி தலைவர் பதவியில் இருந்து சர்தாரி ராஜினாமா செய்யவில்லை.

இதை தொடர்ந்து அதிபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லாகூர் ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் கூறுகையில், ' நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. எனினும், அதிபர் பதவிக்கே உரித்தான சில சலுகைகள், அதிகாரங்கள் சட்டப் பிரிவு 248 (2)ன் படி சர்தாரிக்கு இருப்பதால், அவரை தண்டிக்க முடியாதுÕ என்று உத்தரவிட்£ர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.கே.தோகர், 'அப்படியானால், அதிபர் பதவி வகிப்பவர், யாரையாவது கொலை செய்து விட்டால் அப்போது என்ன நடக்கும்' என்று கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.