Header Ads



கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு சட்டக் கற்கை விழிப்புணர்வுமன்ற ஏற்பாட்டில் கருத்தரங்கு

(எம்.பீ.எம்.ரமீஸ்)

கிராம சேவை உத்தியோகத்தர் தரம் 3 ற்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி மூலமான பரீட்சாத்திகளின் நலன் கருதி நாடாளாவிய ரீதியான கருத்தரங்கொன்றினை சட்டக் கற்கைகளுக்கான விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. 

இக்கருத்தரங்கானது கொழும்பி;ல் எதிர்வரும் 22 ம் திகதி கொடஹேன றோயல் அகடமியிலும், 23 ம் திகதி கண்டி கொடுகொடல்ல வீதியிலுள்ள என். ஸீ. ஐ நிறுவனத்திலும், 25ம் திகதி புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையிலும், 26ம் திகதி காலி தலாபிடியவில் அமைந்துள்ள ஹய் லய்ன் கல்வி நிறுவனத்திலும், 27ம் திகதி பேருவளை டீ. எம். ஐ நிறுவனத்திலும் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கானது  துறைசார் சிரேஷ்ட வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளதுடன், முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 3  ற்கு விண்ணப்பித்துள்ள விண்ணதாரிகளும் விரும்பின் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான மேலதிக தகவல்களை 0777479799, 0777944228, 0778874140 எனும் தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வமைப்பினால் நடாத்தப்பட்ட சட்டமாணி வகுப்புக்களில் கலந்து கொண்ட 6 மாணவர்கள் அண்மையில் திறந்த பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.