அக்குறணை வெள்ளத்தில் மூழ்கியது (படங்கள் இணைப்பு)
(ஜே.எம்.ஹபீஸ்)
நேற்று மாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குறணை நகரம் இன்று 17-12-2012 மூன்று அடி வெள்த்தில் மூழ்கியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 12.30 மணி அளவில் அக்குறணை நகர வீதிகள் மற்றும் தாழ்ந்த பகுதிகள் நீரிழ் மூழகியதுடன், தற்போது சுமார் ஐந்து அடி வரையில் சில இடங்களில் நீர் மட்டம் காணப் படுகிறது. அக்குறணை நகரத்திலுள்ள சுமார் 1500 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டி யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியின் போக்குவருத்து இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வீதின் போக்குவருத்து செய்யும் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியுணுடாக அனுப்பப்படுகின்றன. அக்குறணை பிரதேச செயலகம், அக்குறணைப் பிரதேச சபை, அலவத்துகொடை பொலீஸ் நிலையம் ஆகியன இணைந்து தேவையான நடிவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
Post a Comment