பாம்பு விவகாரம் முடிவுக்கு வந்தது
பாம்புடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு, அந்த பாம்பை திரும்ப வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி காவல்துறையினருக்கு 06-12-2012, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி நிரேஷா விமலரத்ண என்ற குறித்த பெண், கொள்ளுப்பிட்டி விடுதி ஒன்றில் வைத்து பாம்புடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அதனை தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு வழங்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில், குறித்த பெண் இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாம்பினை குறித்த பெண்ணிடமே வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்றைய தினம் அவர் தெஹிவளை மிருககாட்சி சாலையில் இருந்து அந்த பாம்பினை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment