காத்தான்குடியில் கொள்ளை (படங்கள் இணைப்பு)
(அபூஆஷியா)
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கையடக்கத்தொலைபேசி மற்றும் மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்று இன்று (02.12.2012) கொள்ளையிடப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவத்தில் சுமார் ஒன்பது கையடக்கத் தொலைபேசிகளும் இரண்டு டிஜிட்டல் கமராக்களும் களவாடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்பக்கமாகப் போடப்பட்டிருந்த பூட்டு,உள்ளே மூடியிருந்த கண்ணாடிக்கதவு என்பவை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.திருடிச்செல்லப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட உடைமைகளின் மொத்தப் பெறுமதியாக ரூபா ஒன்றரை இலட்சம் என வியாபார நிலைய உரிமையாளரால் மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment