Header Ads



முஸ்ஸியை வெளியேற்ற முயன்றால் இஸ்லாமிய புரட்சி வெடிக்கும் - சலபிகள் எச்சரிக்கை



(tn) ஜனநாயக முறையில் தேர்வான நாட்டின் ஜனாதிபதியை வெளியேற்ற முற்பட்டால் இஸ்லாமிய புரட்சி வெடிக்கும் என எகிப்து சலபி பிரிவின் முன்னணி தலைவர் சயீத் அப்துல் அஸிம் எச்சரிக்கை விடுத்தார்.

“மதச்சார்பற்றோர் ஜனாதிபதியை வெளியேற்றவோ அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவோ முயற்சித்தால் அதுவரை நாம் சும்மா இருக்கமாட்டோம். எண்ணிலடங்காத மக்களைக் கொண்டு ஒரு இஸ்லாமிய புரட்சிக்கான ஏற்பாட்டை செய்வோம்” என்று அலக்சான்ட்ரியா நகரில் நேற்று முன்தினம் நடந்த ஊடக மாநாட்டில் அப்துல் அஸிம் குறிப்பிட்டார்.

இதில் எதிர்த்தரப்பினர் வெளிநாட்டு நிதியில் அமெரிக்காவின் தாக்கத்துடன் இஸ்ரேலுக்கு ஏற்றவாறு எகிப்தின் தலைவிதியை மாற்ற முற்படுவதாகவும் முன்னணி சலபி தலைவர் குற்றம் சாட்டினார். அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என எதிர்த்தரப்பு தலைவர்கள் மீது அவர் குற்றம்சாட்டினார்.

No comments

Powered by Blogger.