தலிபான்களில் சிலர் தமது பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனராம்..!
ஐ.நா.சபையின் ஒரு அங்கமான யுனிசெப்பின் பிரதிநிதியாக இருப்பவர் லூயிஸ் ஜார்ஜ் அர்செனால்ட். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
ஆப்கானிஸ்தானில் சில முக்கிய தலிபான் இயக்கத் தலைவர்கள் தங்களது ஆட்சி அங்கு நடந்தபோது (1996-2011) பெண்கள் கல்வி கற்பது தேவையற்றது. எனவே பெண்களை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அனுமதிக்க கூடாது எனக்கூறி வந்தனர். ஆனால் தற்போது அத்தகைய தலிபான் தலைவர்களே தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிகளுக்கு கல்வி கற்க அனுப்புகின்றனர்.
பெண் கல்விக்கு என்னதான் அங்கு எதிர்ப்புகள் இருந்தாலும் சில என்.ஜி.ஓ. அமைப்பினரும், ஆசிரியர்களும் மறைமுகமாக சில கல்வியை பெண் குழந்தைகளுக்கு தருகின்றனர். யுனிசெப் சார்பில் நடத்தப்படும் மறுவாழ்வு மையங்களிலும் தலிபான் இயக்கத்தினரின் பெண் குழந்தைகள் கல்வி கற்க வருகின்றனர் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment