Header Ads



முஸ்லிம் மாணவியின் கர்நாடக இசை கச்சேரி


இந்தியா - கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மாணவி, 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி, இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

கேரள மலப்புரம் மாவட்டம், வடக்கன்கரா என்ற இடத்தை சேர்ந்த, கருவட்டில் யாசிர் - சகீரா தம்பதியின் மகள், ஹன்னா யாசிர். மலப்புரத்தில் உள்ள, மேல் நிலை பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடக இசை பயின்று வரும் இந்த முஸ்லிம் மாணவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். பாரம்பரிய முஸ்லிம் பெண் போல, முகத்தை மட்டும் வெளியே காட்டியவாறு, மேடைகளில், கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் அருமையாக இசைத்து, இசை ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார்.

""இசைக்கு முன், மதம் கிடையாது; நான் முஸ்லிமாக இருப்பதால், எனக்கு, கர்நாடக இசை பாடல்களை கற்பதிலும், பாடுவதிலும் எந்த கஷ்டமும் இல்லை. அதுபோல, முஸ்லிம் உடையில் மேடையில் தோன்றுவதில் எந்த சிரமமும் இல்லை; என் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை,'' என்கிறார், இந்த மாணவி.கர்நாடக இசை மட்டுமின்றி, கிறிஸ்தவ பாடல்களையும், முஸ்லிம் மத வழிபாட்டு பாடல்களையும் கற்று தேர்ந்துள்ள ஹன்னா, கேரள மாநிலத்தின் இசை குயிலாக பாராட்டப்படுகிறார்.


1 comment:

  1. Isai Seythaanin ragam...
    And Also Woman's voice is a awrath. Allahu Ahlam.

    ReplyDelete

Powered by Blogger.