பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு உதவுமாறு வேண்டுகோள்..!
அரசியல் ரீதியாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளத் தவறிய சமுதாயம் பல்லின சமூக அமைப்பில் அடையாளமிழந்ததொரு சமுதாயமாகவே கருதப்படும். நிகழ்காலத்தில் இதன் நகர்வு மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே காணப்படும். எதிர்காலமும் ஒரு பாதுகாப்பற்றதாகவே இருக்கும். பல்லின சமூக அமைப்பு முறையில் இரண்டு பெரும்பான்மை சமூகங்களின் கெடுபிடிகளுக்கிடையில் அகப்பட்ட 'சேன்ட்வீச்' சாக அரசியல் அநாதைகள் என்ற அவப்பேருடன் எதிர்காலத்திலும் நடைபோட வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமையிலேயே நமது ஊவா முஸ்லிம் சமூகம் இருந்து வருகிறது.
இந்தவகையில் ஊவா மாகாண முஸ்லிம்கள் காத்திரமானதொரு அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறாத சமுதாயமாக கடந்தகாலங்களில் பல்வேறு வகையான சமூகச் சவால்களை எதிர்கொண்டவர்களாவர். பதுளையில் ஏற்படுத்தப்பட்ட பர்தாப் பிரச்சினைத் தொடக்கம் மலையக ஆசிரியர் நியமனங்கள் மற்றும் முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவிற்கு தொடர்ந்தேச்சையான திட்டமிட்ட செயற்பாடுகள் போன்றவற்றால் நெருக்குதல்களுக்குள்ளான ஊவா முஸ்லிம் சமூகம் ஓரளவேனும் தன்னை சுதாகரித்துக் கொள்ள முடிந்தது. சமூக அமைப்புகளின் எதிர்ச் செயற்பாடுகளின் மூலமாகவாகும். ஒரு தீர்க்கமான அரசியல் பிரதிநிதித்துவம் இன்மையால் ஏற்பட்டுள்ள இடைவெளியை ஓரளவேனும் ஈடுகொடுப்பதற்காக அதன் தேவையுணர்ந்தவர்களால் 'மலையக முஸ்லிம் மாநாடு' கடந்த 2011.06.18ம் திகதி இஸ்தாபிக்கப்பட்டது.
இதன் குறுகிய கால செயற்பாடுகளில்..!
* 2011.6.18ம் திகதி ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் ஊவா மாகாண முஸ்லிம்பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள புறக்கணிப்புகளுக்கு எதிர் செயற்பாடுகளுக்காக மேற்படி மாநாடு இஸ்தாபிக்கப்பட்டது. பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா இதன் ஆரம்ப நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு இவ்விடயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பதுளை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் மேற்படி 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் அநீதிக்கு உட்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் நியாயம் பெற உடனடியாக இவ்விடயம் ஜனாதிபதி அவர்களினதும் கல்வி அமைச்சரினதும் ஊவா மாகாண முதல்வரினதும் கவனயீர்பைப் பெறுவதற்காக வேண்டி சுமார் 2500 தந்திகள் மாவட்ட மட்டத்தில் அனுப்பிவைக்கப்பட்டது.
* ஜனாதிபதி அவர்களுக்கனுப்பப்பட்ட மேற்படி கடிதத்திற்கான பதில் கடிதம் 2011.7.22ம் திகதி கிடைக்கப்பெற்றது. அக்கடிதத்தின் படி மேற்படி 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் பதுளை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் தெரிவுசெய்யப்படாமை குறித்து கல்வி அமைச்சு செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ü அதற்கமைய 2011...8.2ம் திகதி ஊவா மாகாண பிரதம செயலாளரின் பணிப்பின் பெயரில் மலையக முஸ்லிம் மாநாட்டு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு ஊவாமாகாண கல்வி செயலாளரின் தலைமையிலும் பிரதம செயலாளரின் பிரதிநிதியாக உதவிப்பிரதம செயலாளரின் பங்கேற்புடனும் ஊவா மாகாண முஸ்லிம் அமைப்புகள், பாடசாலை அதிபர்கள மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்கள் ஆகிய பிரதிநிதிக் குழுவை மாகாண சபை மூலமாகவே நேரடியாகவே அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கமைய கல்வி செயலாளர் மூலம் உடனடியாக பஃஅல்-அதான் மகா வித்தியாலயம் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு ஆவண செய்தார்.
ü மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்த ஏனைய விடயங்களை ஊவா மாகாண பிரதம செயலாளர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய மீண்டுமொரு கூட்டம் 2012.1.13ம் திகதி மாகாண பிரதம செயலாளரால் தமது காரியலயத்தில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தின் போது நாம் முன்வைத்த சிபாரிசுகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி மிகப் பிரதானமாக ஊவாமாகாண சபையில் முஸ்லிம்களுக்கென ஒரு தனியான கல்வி கலாசார அலகை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி செயலாளர் பணிக்கப்பட்டார். இவ்விடயமானது (மலையக முஸ்லிம் மாநாடு) இமாலய சாதனையாக கருதுகிறோம். இவ்விலக்கை அடைய வள்ள அல்லாஹ் எமக்கு துணைபுரிந்தான் என்பதை திடமாக நம்புகிறோம்.
ü ஊவா மாகாண முஸ்லிம்களின் நீண்டநாள் கனவாக இருந்துவரும் முஸ்லிம் மகளிர் கல்லூரி நிர்மாணப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலை இருந்ததால் மேற்படி சந்திப்புகளின் மூலம் இதற்கான தீர்வும் எட்டப்பட்டு கட்டிட நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 2011 டிசம்பர் மாதம் 15ம் திகதிக்குப் பிறகு குறித்த கட்டிடத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட அளவேனும் உபயோகிக்கப் படாவிட்டால் இதற்கான மொத்த நிதியும் இன்னுமொரு புதிய நிதியாண்டிற்கு கட்டிட நிர்மாணப் பணிகள் பின்போடப்படும் என்ற நிலை ஏற்பட்டதால் துரிதமாக அடிக்கல் நடு விழாவொன்றை மேற்கொண்டு நிர்மாணப்பணிகள் அவசரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே மாகாண முதலமைச்சரின் விNஷட பணிப்புரையின்படி மாகாணக் கல்வி செயலாளர் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாகாணக் கல்வி செயலாளரின் தலைமையிலே அடிக்கல் நடு விழாவும் 2011.11.05ம் திகதி நடைபெற்றது.இவ் அடிக்கல் நடு விழாவை பிற்போடுவதற்கு இறுதி நிமிடம் வரை சில அரசியல் தலைமைகள் முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு பிற்போடப்பட்டிருந்தால் இன்றைய கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் வடிவைக் காணுவது சாத்தியப்படாத காரியமென்றே குறிப்பிட வேண்டும். ஆக ஊவா மாகாண முஸ்லி;ம் கலவி அபிவிருத்தி சபை (ருஆநுனுயு) வின் பாரிய பங்களிப்புடனும் பதுளை பிரதேச அனைத்து சங்கங்களினதும் சமூகத் தலைமைகளினதும் பள்ளிவாயில்கள் மற்றும் ஊராரின் நீண்டகால உழைப்பிற்கும் மேற்படி மகளிர் வித்தியாலய கனவு நனவானது.
 
புதுளை தமிழ் மகளிர் கல்லூரியி;ல் கல்வி கற்ற முஸ்லிம் மாணவிகளுக்கும் கற்பித்த முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பர்தாவுக்கு தடை விதித்த போது நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டபேரணி.
கடந்த 2007.05.27 ஆம் திகதி ஆரம்பித்த மேற்படி பாடசாலை மிகக் குறுகிய கால வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து இன்று பதுளை மாநகர பிரபலமான பாடசாலைகளுடன் முன்னணியில் போட்டியிடக்கூடிய நிலையில் இப்பாடசாலை தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் பஃஅல் அதான் மகா வித்தியாலயத்தில் தரம் 1,2,3 ஆம் வகுப்புகளில் கல்வி பயின்ற பெண் மாணவிகள் 127 பேருடனும் 6 ஆசிரிய பெண்மணிகளுடனும் பதுளை உமேடா நிறுவனத்தின் கட்டிடத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, தற்போது தரம் 6 வரையான வகுப்புகளையும் 196 மாணவிகளையும் 14 ஆசிரியர்களுடனும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
குறிப்பிட்ட காலத்தினுள் இக்கல்லூரிக்கான தனியானதொரு காணியைப் பெற்று இதற்கான சொந்தக் கட்டிடத்தையும் நிர்மானிக்க வேண்டியிருந்த பாரிய சவால்களுக்கு மத்தியிலும் சமூகத்தின் மாற்று கருத்தைக் கொண்ட சிலரின் எதிர் செயற்பாடுகள் மத்தியிலும் குறிப்பிட்ட காணியையும் பெற்று அதில் மூன்றுமாடிக் கட்டிடத்தின் முதலாம் கட்டத்தையும் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இன்ஷா அல்லாஹ் 2012 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது பஃமுஸ்லிம் மகளிர் கல்லூரி அதன் சொந்தக் காணியில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கக் கூடிய தருவாயில் உள்ளதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கையில் மேலும் ஓர் பாடசாலை கூடியுள்ளது என்ற எண்ணப்பாட்டை விட ஒரு தரமான முன்மாதிரிப் பாடசாலை உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த வேண்டுமென்ற பாரிய சவாலை இதன் அதிபருடன் ஆசிரியர் குழாம், பெற்றார்கள் ஆகியோர் சிரமேற்கொண்டு அதற்கான பாதையில் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் மேலான முயற்சியின் பயனாக.....
எ இப்பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் 26 பேரில் 6 பேர் சித்தியடைந்து அதில் ஒரு மாணவி பதுளை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் அதிகூடிய புள்ளியாக 176 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் பொதுவாக மாகாண மட்டத்தில் 9 ஆம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
எ இப்பரீட்சைக்குத் தோற்றிய 26 மாணவிகளும் 77 புள்ளிகளுக்கு மேல் பெற்று இலங்கைக் கல்வியமைச்சினால் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற தகுதிப்பெற்றுள்ளனர். இது பொதுவான மாவட்ட மட்டக் கணிப்பில் ஆகக் கூடுதலான சதவீதத்தைப் பெற்ற பாடசாலை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எ கடந்த ஆண்டு பதுளை வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் ஆக்கத்திறன் போட்டியில் பங்குகொண்ட ஒரு மாணவி முதலாமிடத்தைப் பெற்று மாகாண மட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்று அகில இலங்கை ரீதியானப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளார்.
எ அதேபோல் கடந்த ஆண்டு பதுளை வலயமட்ட ஆங்கிலத் தின போட்டிகளில் ஐந்து நிகழ்ச்சிகளுக்காக போட்டியிட்ட இம்மாணவிகள் நான்கு போட்டிகளில் வெற்றி நிலைகளைப் பெற்ற அதேவேளை, இவர்களால் அரங்கேற்றப்பட்ட ஆங்கில நாடகம் மூன்றாமிடத்தை சுவீகரித்துக் கொண்டது. இதில் பதுளையின் பிரபல தேசியப் பாடசாலைகளான பஃவிசாகா மகளிர் கல்லூரி, பஃவிஹாரமகாதேவி மகளிர் கல்ல}ரி ஆகியன 1ம், 2ம் நிலைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
எ தமிழ் மொழித்தின விழாவுக்கு மேடையேற்றப்பட்ட நாடகத்தை மதிப்பீடு செய்த மூன்று மத்தியஸ்தர்களும் முதலாம் இடத்தை வழங்கி தீர்ப்பளித்திருந்தாலும் சட்டவிதிகளுக்கமைய ஒரு கதாப்பாத்திரம் கூடுதலாக இடம்பெற்றிருந்ததால் இவர்களின் நாடகம் போட்டி விதிகளின்படி தகுதியிழக்கச் செய்யப்பட்டது. பார்வையாளர்கள் சக போட்டியாளர்கள், மத்தியஸ்தர்கள் அனைவராலும் ஏகமனதாக இவர்கள்தான் முதலாமிடத்துக்குரியவர்கள் என்று கருத்துக் கூறியபோதும்,தாங்கள் சட்டவிதிகளை மீறியதாக ஒப்புக்கொண்டு மத்தியஸ்தரின் தீர்ப்பை ஏற்கும் மனப்பாங்கை நிலைநிறுத்தினார்கள்.
எ ஊவா மாகாணக் கல்வித் திணைக்களத்தால் பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் 25 மாணவர்களை பொதுப் பரீட்சையொன்றின் மூலம் தெரிவுசெய்து நடாத்தப்படும் 'ஒலிம்பியாட்' என்ற ஆங்கில பாடநெறிக்கு இக்கல்ல}ரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவியொருவர்தெரிவாகியுள்ளார்.

அதிபர்உடன் ஆசிரியர் குழு
இவர்களின் இத்தகைய சாதனைகள் மேலான அடைவு மட்டங்களை குறுகிய கால வரலாற்றினுள் நிலைநிறுத்தி வருவதை அவதானித்த மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், மாகாணக்கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப்பணிப்பாளர் போன்ற மேலதிகாரிகளின் கவன ஈர்ப்பைப் பெற்றதால் இக்கல்லூரியில் தரம் 6 முதல் 11 வரை வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்கியுள்ளதுடன் தரம் 6 முதல் ஆங்கில மொழி மூலமும் கல்வியைத் தொடர இருமொழி மூல பாடசாலையாக (டீலடiபெரயட) பாடசாலையாகவும் இக்கல்ல}ரியைப் பிரகடனப்படுத்தியதுடன் அதற்கான ஆசிரிய வளத்தையும் பெற்றுத் தந்துள்ளார்கள்.
பதுளை மாநகர முஸ்லிம்களின் ஆண்கள் கல்விக்காக தனியான பாடசாலையாக பஃஅல் அதான் மகா வித்தியாலயத்தையும், பெண்களுக்கான தனியான பாடசாலையாக முஸ்லிம் மகளிர் கல்லரியையும் கட்டியெழுப்பும் ஒரு உன்னதமான இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இம்மகளிர் கல்ல}ரி ஆரம்பிக்கப்பட்டது.
ஆனாலும்; ஆரம்பிக்கப் பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின், இக்கல்ல}ரியில் கல்வி பயின்ற சுமார் 90 மாணவிகளை விலக்கி, மீண்டும் பஃஅல் அதான் மகா வித்தியாலயத்தில் சேர்த்ததும், பஃஅல் அதானை தொடர்ந்தும் ஒரு கலவன் பாடசாலையாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். பிள்ளைகளை ஆண்கள், பெண்கள் பேதமின்றி கற்பிப்பதால் மாத்திரமே அவர்களின் கல்வியை வளரச் செய்யலாம் என்றும், இக்கல்லூரியில் இஸ்லாத்திற்கு முரணான (தௌஹீது) கொள்கைகளை பரப்;புககிரார்கள் என்றும் பகிரங்கமாக பெற்றார்கள் மத்தியில் முன்னாள் அதிபராலும் அவரின் ஆதரவாளர்களாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும், 'மகளிர் கல்லூரி விடயம் ஒரு சிலரால் முன்; வைக்கப்படும் ஒரு பொய்யான கட்டுகதை' என்று எழுதப்பட்;ட துண்டுப்பிரசுரஙகளை பகிரங்கமாக பொதுமக்;களுக்கு மத்தியில் பகிரப்பட்டு பெற்றார்களை குழப்;;;;பத்திற்குள்ளாக்;கியபோதும்;, எஞ்சியிருந்த இப்பாடசாலையின் தற்போதைய பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளின் கல்வியில் மிகவும் கரிசனையோடு செயல்பட்டு இப்பாடசாலையை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் இன்று பலன் தர ஆரம்பித்துள்ளன .
கல்லூரி அதிபர் ஆ.யு.ஹைருன் நிஸா அவர்களின் செய்தி.

'முஸ்லிமான ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் கல்வியைக் கற்பது கடமையாகும்'. என்று உலகப் பொதுமறை அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது. ஆனால், பெண்கள் கல்வியை நோக்குமிடத்து அதற்கான பிரத்தியேகமான சில முக்கியமான வரையறைகளையும் இஸ்லாம் வகுத்துள்ளது.
அந்த வகையில் பிகப் பிரதான வரையறையான ஆண் பெண் கலப்பு (ஊழுசுநு நுனரஉயவழைn) கல்வி முறையை இஸ்லாம் எவ்விடத்திலும் பரிந்துரை செய்யவில்லை. இதன் தாற்பரியத்தை புரிந்ததாலோ என்னவோ இஸ்லாம் அல்லாத ஏனைய சமயங்கள் இலங்கையில் பெரும்பாலும் பெண்களுக்காகவும், ஆண்களுக்காகவும் தனியான பாடசாலைகளை நிர்மாணித்து கல்வியில் ஒரு பொது ஒழுக்கப்பாட்டை பேணி வருகின்றன. இதற்கான சில உதாரணங்களை நிகழ்காலத்தில் நாம் கண்கூடாகக் காணலாம்.
இன்று இலங்கையில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளான மகாமாயா, விசாகா பாலிகா, விஹாரமகாதேவி, தேவி பாலிகா, ஆனந்தா, நாளந்தா, தர்மராஜ, னு.ளு .தர்மதூத போன்ற பௌத்த பாடசாலைகள் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் தனித்தனியாய் இயங்கி வருகின்ற பாடசாலைகளாகும். அதே போல் புனித திரித்துவ கல்லூரி, சென் செபஸ்டியன், கின்ஸ்வூட், சென் அந்தோனிஸ், சில்வேஸ்டர் போன்ற பிரசித்தமான கிறிஸ்தவ பாடசாலைகளும், ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் தனித்தனியாக இயங்குகின்றன.
ஏன் எமது பிரதேசத்தில் கூட இன்று பிரபலமாக இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான மாற்றுமத பாடசாலைகளும் ஒருபாற் கல்லூரிகளாகவே காணப்படுகின்றன. பஃதர்மதூத பாடசாலை, பஃஊவா கல்லூரி, பஃவிஷhகா, பஃவிஹாரமகாதேவி, பஃசுஜாதா கல்லூரி, பஃசரஸ்வதி, பஃதமிழ் மகளிர் கல்லூரி போன்ற அனைத்து பாடசாலைகளும் கலவன் பாடசாலைகளாக இயங்கவில்லை.ஆனால் பதுளை மாநகர எல்லைக்குள் இரண்டாம் சிறுபான்மையாக 9000 வாக்குகளை பலமாகக் கொண்ட எமது சமூகத்திற்கு ஒரேயொரு கலவன் பாடசாலையாக பஃஅல் அதான் மகா வித்தியாலயம் மட்டுமே 2009.05.27 வரை நடைமுறையில் இருந்து வந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு பதுளையில் ஏற்பட்ட பர்தா பிரச்சினையின் பின் முஸ்லிம் மாணவர்களுக்காக தனியானதொரு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தேவை யதார்த்தமாக உணரப்பட்டதால் கடந்த சுமார் 13 வருடகால அயராத உழைப்பில் கிடைத்ததே இந்த பதுளை முஸ்லிம் மகளிர் கல்ல}ரி. இது ஓரிருவரின் முயற்சியால் உருவானதொரு பாடசாலையல்ல. மாறாக, சமூகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரின் அயராத கூட்டு முயற்சியினால் கிடைத்த பலனாகும். இப்பாடசாலையின் உருவாக்கத்திற்காக உழைத்த அத்தனைப் பேருக்கும் வல்ல அல்லாஹ் சமமான கூலியை வழங்கப் போதுமானவன்.
அதே வேளை, இப்பாடசாலையின் உருவாக்கத்திற்கு ஒருசில பேர் தொடர்ந்தும் எதிர்த்தே செயற்பட்டு வருகிறார்கள். இவர்கள் 'இப்பாடசாலை ஒருசிலரின் பொய்யான கட்டுக்கதை! மகளிர் கல்லூரிக்கென எந்த விதமான காணியும் கிடைக்கப் பெறவில்லை! அப்படிக் கிடைத்ததாக கூறப்படும் தஸ்தாவேஜூகள் பொய்யானவை! அநியாயமாக பெண் பிள்ளைகளை வேறாகப் பிரித்து சீரழிக்கின்றார்கள்! இதன் கட்டிடத்திற்காக மாகாண சபை மூலம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மக்களை ஏமாற்றும் செயல்! அல் அதான் மகா வித்தியாலயத்தை இல்லாமல் ஆக்குவதற்கு செய்யப்படும் சதி முயற்சி!' போன்ற விடயங்களை எழுதி துண்டுப் பிரசுரங்களாக தொடர்ந்தும் வெளியிட்டார்கள். மேடைகளில் கூறினார்கள்.
இறுதியில் 'ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக சேர்த்துத்தான் கற்பிக்க வேண்டும், அவர்களை தனியாகப் பிரித்து கற்பிப்பதால் ஆண்கள் கல்வியில் பின்னடைவு ஏற்படும், பெண்கள் மாத்திரம் சிறப்பாக கற்பார்கள். ஆகவே சிறு வயது முதல் அவர்களை வேறாகப் பிரிக்கத் தேவையில்லை' என்று இக்கல்லூரியின் பெற்றார்கள் மத்தியில் பகிரங்கமாகவே கூறினார்கள். மேற்படி கருத்துக்கள் மேடையில் முழங்கப்படும்போது மேடையில் சங்கைமிக்க உலமாக்கள் சிலரும் வீற்றிருந்தது மறக்க முடியாத காட்சிகளாக இன்றளவும் எமது உள்ளங்களில் பதிந்துள்ளன. இதன் உச்ச கட்டமாக இக்கல்லூரியில் கல்வி பயின்ற 90 பெண் பிள்ளைகளை பஃ அல்- அதான்; மகா வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டது எமது இந்த முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வரலாற்றில் ஒரு சோக நிகழ்வாகவும் மாறாத வடுவாகவும் பதியப்பட்டுவிட்டது.
பதுளை மாநகர முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்காக ஆண்களுக்கு ஒரு தனியான பாடசாலையும், பெண்களுக்கு ஒரு தனியான பாடசாலையும் உருவாக்கப்பட வேண்டு;ம் என்ற உயர்ந்த இஸ்லாமிய சிந்தனையின் கீழ் உருவாக்கப்பட்ட எமது பாடசாலை 2009 மே மாதத்திலிருந்து 2011 மே மாதம் வரை மேற்படி கொள்கையுடன் இயங்கி வந்தாலும் 2 வருட காலத்திற்குப் பின் இச்சிந்தனை தகர்த்தெறியப்பட்டு, 90 மாணவிகளை அல் அதான் மகா வித்தியாலயத்திற்கு சேர்த்தார்கள். அத்துடன் தொடர்ந்தும் எமது தாய் பாடசாலையான பஃஅல் அதான் மகா வித்தியாலயம் கலவன் பாடசாலையாகவே இயங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
இன்று ஆண்,பெண் கலப்புக் கல்வி முறையால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளை அன்றாடம் கேள்விப்படுகின்றோம். ஆண் பெண் கலப்புக் கல்வி முறையை உலகிற்கு சிபாரிசு செய்தவர்;களில் 'சிக்மன் புரொயிட்'; என்ற யூத சிந்தனையாளர் முக்கியமானவர். இவர் ஒரு பிள்ளை தன் தாயிடம் பால் குடிப்பது கூட காமத்தின் வெளிப்பாடு என்று கருத்துக் கூறியவர். இச்சிந்தனைகளை இஸ்லாம் இன்றைக்கு 1430 வருடங்களுக்கு முன் தகர்த்தெறிந்துவிட்டது. ஆகவே ஒழுக்கக் கேடுகளின் பால் எமது எதிர்கால சமூகத்தை ஒட்டிச் செல்லாது சீர்கல்வியின் பால் இட்டுச் செல்ல வேண்டியது காலத்தின் தேவையும் பொறுப்புதாரிகளின் தலையாய பொறுப்புமாகும். இன்று எமது தாய் பாடசாலையான பஃஅல் அதான் மகா வித்தியாலயம் 1000 பாடசாலைத் திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதில் நாங்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் இன்னுமொரு கனிஷ;ட பாடசாலை உருவாக்கப்பட்டதில் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் கன்னியமிக்க உலமாக்கள், புத்தி ஜீவிகள், அறிஞர் பெருந்தகைகள், மற்றும் மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் ஆகியோரிடம் வினயமாக ஒரு வேண்டுதலை முன்வைக்க விரும்புகிறேன். பதுளையில் முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் தற்போது ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களின் ஊடாக எமது பிரதேசத்தின் முஸ்லிம் கல்வி அபிவிருத்தியை மார்க்க விதிமுறைகளுடன் முன்கொண்டு செல்ல வல்ல அல்லாஹ் எமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார். அதுதான் தரம் 1 முதல் 5 வரை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அல் - ஹிக்மா கனிஷ;ட வித்தியாலயத்தில் கற்பித்து தரம் 6 ற்கு மேல் மேற்படிப்பை தொடர வேண்டிய எமது மாணவ மாணவிகளுக்கு ஆண் பிள்ளைகளை பஃஅல்-அதானிலும், பெண் பிள்ளைகளை முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் சேர்த்துக் கற்பிப்பதன் மூலம் மேற்படி எமது இரு கல்லூரிகளையும் களங்கரை விளக்குகளாக மிளிரச் செய்யலாம்.
ஆகவே இச்சிந்தனையின் பால் மக்களை அணித்திரளச் செய்து எமது இரு கண்களாக இரு கல்லூரிகளையும் வளர்த்தெடுப்போம் என்று வேண்டுகின்றேன்.

பதுளை முஸ்லிம் மகளிர் கல்லுரி அதிபர் எம் ஏ ஹைருன் நிஸா அவர்களும் நிகழ்வில் பிரதம அதிதியாககலந்து கொண்ட உமேடாவின் பிரதித்தலைவர் டாக்டர் எம் எச் சலாஹூதீன் அவர்களும் மாணவி ஒருவருக்கு பரில்களை வழங்குவதையும் படத்தில் காணலாம்
உமேடாவின் தற்காலிக கட்டடத்தில் கல்விபயிலும் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள்

பதுளை முஸ்லிம் மகளிர் கல்லுரியின் மூன்றாண்டு விழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள்
இக்கல்லுரியில் கல்வி பயிலும் ஏ எஸ் சுஹைரா என்ற மாணவி பதுளை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் அதிகூடிய புள்ளியாக 176 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் மாகாண மட்டத்தில் (பொதுவாக) 9 ஆம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்ததற்காக மாகாண முதல்வர் திரு சஷீந்திர ராஜபக்ஷவினால் சான்றிதழ் வழங்கி கௌhரவிக்கப்பட்டபோது,(மாகாண கல்விச் செயலாளரும் மாகாண கல்வி பணிப்பாளரும் அருகில் உள்ளார்கள்)
பதுளை முஸ்லிம் மகளிர் கல்லுரியின் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாகாண கல்வி செயலாளர் எல எல அனில் விஜேசிரி அவர்கள்
பதுளை முஸ்லிம் மகளிர் கல்லுரியின் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதம அதிதி மாகாண கல்வி செயலாளர் எல எல அனில் விஜேசிரி அவர்கள் நட்டுவைத்த போது

பதுளை முஸ்லிம் மகளிர் கல்லுரியின் மூன்று மாடி கட்டத்தின் முதலாம் பகுதி;
எமது அவசரத் தேவை என்ன?
கடந்த சுமார் 13 வருட கால தொடர்ச்சியான போராட்டத்தில் நாம் எமது இலக்கினை அடைந்து விட்டோம். ஆயினும் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் தரம் 06க்கான அனுமதியை பெறுவதில் மீண்டும் பல தடைகளை எதிர்நோக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அதாவது தற்போது இக்கல்லூரிக்காக கட்டப்பட்டுள்ள மூண்று மாடி கட்டிடத்தின் 1ம் கட்டம் மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. அதன் 02ஆம் 03ஆம் மாடிக் கட்டிடத்திற்கான நிதியினை 2013ஆம் ஆண்டில்தான் நமக்கு ஒதுக்கீடு செய்வார்கள். ஆனால் தற்போதுள்ள கட்டிடத்தில் 04 வகுப்புக்களை மாத்திரமே நடத்த முடியுமாக உள்ளது. தற்போதைக்கு 01முதல் 06 வரை எட்டு வகுப்பறைகள் தேவைப்பாடாக உள்ளன. ஆகவே மேலும் 05 வகுப்பறைகளுக்கான இடவசதி தேவைப்படுவதுடன் 2012ம் ஆண்டில் தரம் 06 ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாகாண கல்வித் திணைக்களம் தரம் 06க்கான அனுமதியை மறுத்து வந்தது. இதற்கிடையில் எமது சமூகத்தில் மாற்றுக் கருத்துடையவர்கள் சிலரும் தரம் 06ற்கான அனுமதியை வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். இதை மாகாண திணைகளத்திற்கும் அறிவித்திருந்தார்கள். இக்கெடுபிடிகளுக்கு மத்தியில் தற்போது எமது மகளிர் கல்லூரியில் தரம் 06ல் கல்விக் கற்கும் மாணவிகளை பதுஃ சரஸ்வதி தேசியபாடசாலையில் நீக்குமாறு மாகாணத் கல்வித்திணைக்களத்தில் எமது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எமது முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான தேவைப்பாடு தரம் 6 லிருந்துதான் ஆரம்பமாகின்றது. தரம் 01 முதல் 05 வரை மகளிர் கல்லூரி ஒன்று எமக்கு எவ்வகையிலும் தேவையில்லை. ஆகவே எமது இத்தேவையை உணர்த்தி தரம் 06ஜ உத்தியோகப் பூர்வமாக அறிவிப்பதற்கான அனுமதியைப் பெற பாரிய முயற்சி ஒன்று தேவையாயுள்ளது.இத்தேவையை அதிமேகு ஜனாதிபதி கல்வி அமைச்சர், மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோறுக்கு அறிவிக்கப்பட்டு மாகாண கல்வித் திணைகளத்தின் மூலம் சுற்றிக் காட்டப்பட்ட தழ அடிப்படைத் தேவையை, குறிப்பாக கட்டிட வசதிகளை நாம் உடணடியாக பூர்த்திசெய்து தருவதாகவும் தேவையான ஆசிரியர் வழங்களை மாகாண கல்வி செயலாளர் மூலமாக பெற்றுக் கொள்ள ஆவணம் செய்வதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் தரம் 06க்கான அனுமதியை பெற்றுள்ளோம். அத்துடன் தரம் பத்து வரையிலான வகுப்புகளை இன்ஷா அல்லாஹ் 2013 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆகவே அடுத்த மாத இருதிக்குள் குறிப்பாக கட்டிடத்தினை கட்டிமுடிக்க வேண்டிய இக்கட்டான தேவைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அக்கட்டிடத்தின் நிர்மாண பணிகளில் ஈடுப்பட்டுள்ள நாம் கீழ்கானும் வகையில் எமது தேவைகளை முன்வைக்கின்றோம். இவ்வரலாற்றுத் தேவைக்கு மனமுவந்து ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவாய் வேண்டுகிறோம்.
---------------
இந்த வரலாற்று முக்கியத்துவமான மகளிர் கல்லூரிக்கு தேவையான மேற்படி உதவிகளை செய்ய முன் வரும் பரோபகாரிகள் கீழ்காணும் தொடர்புகளை அவசரமாக அழைக்கவும்
மௌலவி ரினாஸ் அவர்கள் (பொருளாளர் ) -0094773728083
செய்யத் அஹ்மத் (தலைவர்) -009477088166
யு.ஆ.ஆ. முசம்மில் (இணை செயலாளர்) - 0094771236781
ஏ எம் எம் முஸம்மி;ல் (டீ.யு.ர்ழளெ) இணை செயலாளர் மலையக முஸ்லிம் மாநாடு (ர.உ.அ.உ)
பதுளை.
Post a Comment