இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதி முன்னாள் புலிகளையும் சந்திப்பார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் வரும் புதன்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவருடன் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் கொழும்பு வரவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, கூட்டுப்படைகளின் தளபதி, முப்படைத் தளபதிகள் ஆகியோரை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் சந்திக்கவுள்ளார்.
வவுனியா பாதுகாப்புப்படைத் தலைமையகத்துக்கும் செல்லும் அவர், பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்துக்கும் சென்று முன்னாள் போராளிகளுடன் கலந்துரையாடவுள்ளார். தியத்தலாவ, அனுராதபுர, கண்டி ஆகிய இடங்களுக்கும் இந்திய இராணுவத் தளபதி பயணம் மேற்கொள்வார்.
Post a Comment