Header Ads



'சமூது' கூட்டம் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சவூதி அரேபியாவில் அனுமதி


(மறுப்பு)

சவூதி அரேபியாவின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம் "மதாயின் சாலிஹ்" பழமைச்சின்னத்தை பார்வையிட விதித்திருந்த தடையை நீக்கிவிட்டதாக, தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.

சவூதி அரேபியாவின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழக டைரக்டர் "அப்துல்லாஹ் அல்ஜரீஃபானீ" செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.

முன்னதாக "மதாயின் சாலிஹ்" தடை குறித்து, "சவூதி உலமா சுப்ரீம் கவுன்சில்" பிறப்பித்திருந்த "ஃபத்வா" திரும்ப பெற்றுக்கொண்டதாக, உலமா கவுன்சில் அறிவித்துள்ளது.

மதீனா நகர எல்லைக்குள் அமைந்துள்ள "மதாயின் சாலிஹ்" பழமைச்சின்னம், நபிகள் நாயகத்துக்கு முந்தய காலத்தில் "சமூது" கூட்டத்துக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட "சாலிஹ்" நபியின் பெண் ஒட்டகம் கொல்லப்பட்ட இடம்.

"சமூது" கூட்டத்தினரின், அப்பாவத்தின் காரணாமாக அக்கூட்டம் அழிக்கப்பட்ட இடம் தான் "மதாயின் சாலிஹ்" என்பது, பல அறிவிப்புக்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் அவர்கள், ஒருமுறை இந்த இடத்தை கடந்து சென்றபோது, இது சமூது கூட்டம் அழிக்கப்பட்ட இடம் என சொல்லப்பட்டதையடுத்து, நபிகள் நாயகம் அவர்கள், முகத்தை தாழ்த்தி (அவ்விடத்தை பார்க்க விரும்பாமல் முகத்தை திருப்பிக்கொண்டு) அவ்விடத்தை கடந்தார்கள்.

எனவே தான், "மதாயின் சாலிஹ்" சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட எவரும் பார்க்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது "யுனெஸ்கோ" அமைப்பு "மதாயின் சாலிஹ்" சின்னத்தை "உலக மக்களின் வரலாற்று படிப்பினை" சின்னமாக அறிவித்துள்ளதால், சுற்றுலாவிற்கு தடை விதித்து முன்பு பிறப்பிக்கப்பட்டிருந்த "ஃபத்வா" திரும்ப பெற்றுக்கொண்டதுடன், மதீனா, மக்கா, ஜித்தா உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் "மதாயின் சாலிஹ்" பகுதிக்கு வந்துசெல்லும் வகையில், புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

"மதாயின் சாலிஹ் மியூசியம்" அடிக்கல் நாட்டு விழாவும், ரயில் பாதை அமைக்கும் துவக்க விழாவும் "யுனெஸ்கோ" அதிகாரிகளின் முன்னிலையில், விரைவில் நடக்கவுள்ளதாக தெரிவித்தார், அப்துல்லாஹ் அல்ஜரீஃபானீ.

1 comment:

  1. Quoting Immam Buhary, you are closing, quoting UNESCO, you are opening. What a funny????

    ReplyDelete

Powered by Blogger.