Header Ads



குளியல் அறையில் விழுந்து ஹோஸினி முபாரக் காயம்


சிறையில் குளியல் அறையில் கீழே விழுந்தது காயம் அடைந்த எகிப்து முன்னாள் அதிபர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எகிப்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் அதிபர் ஹோஸினி முபாரக் (84) பதவி விலகினார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கடந்த ஜூன் மாதம் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து.

கெய்ரோ சிறையில் உள்ள முபாரக் நேற்று சிறை குளியல் அறையில் வழுக்கி விழுந்தார் .அதில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், ‌ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.