Header Ads



முஸ்லிம் சமூகத்தின் கல்வியில் ஆப்புவைக்க சதி..!


(சத்தார் எம்.ஜாவித்)   

2013 ஆம் ஆண்டிற்கான சட்டக்கல்லூரி கற்கை நெறிக்கான நுழைவுப் பரீட்சையில் இம்முறை மொத்தமாக 309 மாணவர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள்  முஸ்லிம் மாணவர்கள் அத்துடன் இதை விட சற்றுக்குறைவன வீதத்தில் தமிழ் மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சகல மொழி மாணவர்களுக்கும் ஒரேமாதிரயான வினாப் பத்திரங்களைக் கொண்ட போட்டிப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிக்காட்டி இம்முறை சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் சுமார் 75 க்கும் மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டதை சில பெரும்பான்மை இனவாத கட்சிகளும், சில இனவாத சமயத் தலைவர்களும் மாணவர்களின் திறமையை ஜீரணிக்க முடியாது. தம்மாலும் திறமையைக் காட்ட முடியவில்லை மற்றவனையும் முன்வரக் கூடாது என்று சிறுபான்மை இனம் மீது இனவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை சிறபான்மை இனம் மட்டுமல்ல புத்தியுள்ள பெரும்பான்மை இன புத்திஜீவிகளும் கூட இவர்களின் இந்தச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றனர்.

இன்று இதனை பொறுக்க முடியாத சில இனவாத செயற்பாட்டாளர்களும், போலிச் சமயத் தலைவர்களும் சிறுபான்மையினரான முஸ்லிம் மாணவர்களின் இந்த திறமையை சகிக்க முடியாது ஏன் தம்மால் முடியாத கையாலாகாத் தன்மையினால் இனவாதச் செயல்களில் ஈடுபட்டு முஸ்லிம் தமிழ் மாணவர்களை ஓரங்கட்டச் செய்துவருகின்றனர். அத்துடன் தமது இனத்தை படிக்காவிட்டாலும் அல்லது திறமை இல்லாவிட்டாலும் மொக்குத்தனமாக இவ்வாறான திறமைமிக்க கல்விகளில் ஆதிக்கம் செலுத்த குறுக்கு வழிகளை மேற்கொள்கின்றனர்.

இவர்களின் இந்தச் செயற்பாடு கடந்த காலங்களில் உயர் கல்விகளிலும், உயர் தொழில் பதவிகளிலும் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு திறமையற்றவர்களை உள்வாங்கி வருகின்றமையை உறுதி செய்வதாக உள்ளமை இவர்களின் தற்போதைய செயற்பாடுகள்  இங்கு புலப்படுகின்றது.

இந்தச் சட்டக்கல்லுரி பட்டப்படிப்பிற்கு கடந்த 2007 மற்றும் 2008 காலகட்டங்களில் தமிழ் , முஸ்லிம் மாணவர்கள் குறைவாக தெரிவு செய்யப்பட்ட வேலைகளில் அப்போதைய தமிழ் மற்றும் சட்டவல்லுனர்களும், புத்தி ஜீவிகளும் சிறபான்மை மாணவர்களின் தொகையைக் கூட்டுவதற்கு குறைந்த பட்சம் இன வீதாசாரத்திற்கமைவாக எண்ணிக்கையை தருமாறு கோரியபோது. அப்போதுள்ள பல முக்கியமான பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் அவ்வாறு செய்யமுடியாது போட்டிப்பரீட்கையில் எவ்வளவுபேர் வேண்டுமானாலும் தெரிவு செய்யப்படுவதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்று கூறி தட்டிக்கழித்து விட்டனர். இவ்வாறு தட்டிக்கழித்த பின்னர் இப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது திறமையை வெளிக்காட்டும் விதத்தில் குறித்த பரீட்சைக்கு தம்மை முழுதாக ஈடுபடுத்தி தயாராகி தோற்றி அதிகப்படிமாணவர்கள் தற்போது தெரிவாகினர்.

இது இவ்வாறு இருக்க தற்போதைய மாணவர்களின் வெற்றியை சகிக்க முடியாத முன்பு போட்டிப் பரீட்சையில் போட்டி போட்டு வருமாறு கூறிய சட்டத்தரணிகள்  இன்று தாம் கூறியதற்கு மாற்றமாக தற்போது செயற்பட்டு  பிரச்சினைகளை கொடுப்பதுடன் பல இனவாத மதத்தலைவர்களையும், இனவாத கட்சிகளையும் தூண்டி விடுகின்றமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

இவ்வாறு திறமைகளைக்காட்டிய மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஆப்பு வைக்கும் இனவாதிகளுக்கு அரசு தகுந்த பாடத்தை புகட்டி சிறுபான்மை மக்களின் கல்வி, தொழில் வாய்புக்களில் அதீத கவனஞ் செலுத்தவேண்டுமெ சிறுபான்மை மக்கள் அரசிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றனர்.

திறமையுள்ளவர்கள் போட்டிப் பரீட்சைகளில் கூட கல்வியிலும் முன்னுக்கு வருவதை விரும்பாக இனவாதிகள் இருக்கும்போது நாட்டில் எவ்வாறு சாமதானம் ஏற்படும் ? என மக்கள் அரசிடம் கேட்கின்றனர். இலங்கையில் சமாதானம் நிலவுகிறது, மக்கள் எதுவித பிரச்சினைகளும் இன்றி இருக்கின்றார்கள் என்று உலகத்திற்கு பறைசாற்றும் அரசு தமது சமாதான செயற்பாட்டிற்கு ஆப்பு வைக்கும் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளில் தலையிடும் இனவாதிகளுக்கு என்ன ஆப்பை வைக்கப்போகின்றது என மக்கள் கேட்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் அரசும், அரச அதிகாரிகளும் உடன் தலையிட்டு சிறுபான்மையினரின் விடயங்களில் மூக்கை நுழைப்பதை தடுக்கும் வகையிலும் சிறுபான்மையினரின் சகல விடயங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களின் திறமைகளை ஏற்று அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இனவாதிகளின் இந்தச் செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துமாறு மக்கள்  அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.