Header Ads



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த பஸ் வெள்ளத்தில் அடிபட்டது


கடந்த இரண்டு தினங்களாக நாடெங்கிலும் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்ட்ட 12 மாவட்டங்களுள் 5 மாவட்டங்களில் இன்னும் அனர்த்த நிலைமைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

புத்தளம், குருணாகலை,கோகாலை, பொலனறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

மழையுடனான காலநிலையால் இதுவரையில் 49 ஆயிரத்து 469 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சிலாபம்; பங்கதெனிய என்ற இடத்தில் பயணிகள் பேரூந்து ஒன்று பயணிகளுடன் நீரில் சிக்கிய நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேரூந்து பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட வேளையில் தீடிரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

பின்னர் பேருந்து மரங்களுக்கு இடையில் சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் வெள்ளம் காரணமாக வெளியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் அவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஒருவருக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.
இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய காலநிலை நிலவரங்களுடன் எமது செய்தியாளர் இணைந்துக் கொள்கிறார்.

No comments

Powered by Blogger.