சர்வதேச குர்ஆன் போட்டியில் முதலாமிடம் பெற்றமைக்கு பாராட்டு - பௌத்த பிக்குகளும் பங்கேற்பு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
சவூதி அரேபியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடத்தை பெற்ற அல்ஹாபிழ் ரிப்தி முஹம்மது ரிஸ்கானை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு 12, வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதனை அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆ பள்ளிவாசல், இஹ்ஸானியா அரபுக் கல்லூரி, மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸா ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
பீர்சாஹிப் வீதி இஹ்ஸானியா அரபுக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக ரிப்தி முஹம்மது றிஸ்கான் ஊர்வலமாக வாழைத்தோட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். வீதியின் இருமரங்கிலும் கூடியிருந்த மக்கள் பூக்கள் துவி, பண்ணீர் தெளித்தும் மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
நஜ்மி பள்ளியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் இஹ்ஸானியா அரபுக் கல்லூரி பிரதி அதிபர் மௌலவி எம்எப்.எம்.பரூத், மதினத்துல் இல்ம் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் மௌவலி அலி உட்பட பலர் உரையாற்றினார்கள்.
அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் எம்.உவைஸ், மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸா தலைவர் ஜஹாங்கிர் அலி, இஹ்ஸானியா அரபுக் கல்லூரி பணிப்பாளர் மௌலவி லமீர் ஹாபிஸ் உட்பட பலர் ரிஸ்கானை ,பொன்னாடை போர்த்தியும் ஞாபக சின்னம், பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.
போதிருக்காராம விகாராதிபதி ஜோதி ரத்ன தேரரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment