Header Ads



வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக விசம பிரச்சாரம் - அமைச்சர் றிசாத்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

நாட்டிலும்,குறிப்பாக வடக்கிலும் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாத நிலையினை தோற்றுவிக்க சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைவதாக குற்றம்; சாட்டியுள்ள வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முஸ்லிம்களை புறந்தள்ளி தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்பது எவ்வாறு எட்டப்படும் என்ற கேள்வி எம்மில் எழுந்துள்ளது என்று  கொழும்பில் அமைந்;துள்ள தமது அமைச்சில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அச்சந்திப்பில் அமைச்சர் கருத்துரைக்கும் போது,

கடந்த சில தினங்களாக சிலர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வருகின்ற போது,இம்மக்களுக்கு எதிராக,அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாத அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.அன்று புலிகளுடன் இருந்துக் கொண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியவர்கள் தான் இவர்கள்.புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தமது ஒதுக்கீடுகளில் எதனையும் செய்ய இந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்,எம்மால் சகல மக்களுக்கும் ஆற்றப்படும் பணிகளைக் கூட தடுக்கும் கைகங்கரியத்தை செய்கின்றனர்.

அன்று முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது,அப்போது இருந்த தமிழ் தலைவர்கள் சிலர் கவலலைப்பட்டனர்.முன்னால் தலைவர் சிவசிதம்பரம் போன்றவர்களை நாம் நினைவுபடுத்த வேண்டும். அதே போல் இன்றும் தமிழ் தவைர்களாக இருக்கின்ற சம்பந்தன்,மாவை சேனாதிராஜா,சுமந்திரன் போன்றவர்களையும் நல்ல செயற்பாடுகள் உள்ளவர்களாக பார்க்கின்றோம். ஆனால் சில உறுப்பினர்கள்,தேவையில்லாத தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்து அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நூன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மெனிக் பார்மில் இருந்த 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியேற்றினேன்.நான் அன்று திட்டமிட்டிருந்தால் முஸ்லிம்களையும் மீள்குடியேற்றி இருக்கலாம்.ஆனால் அதனை செய்யவில்லை அப்போது தேவை இருந்தது தமிழ் மக்களை உடன் குடியேற்ற வேண்டும் என்பதால்,நானும் இந்த இடம் பெயர்வால் நேடியாக பாதிக்கப்பட்டவன்,பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு இருக்கின்றார்களோ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது மாவட்டத்தின் அரசியல்வாதி என்ற வகையில் எனது  பொறுப்பாகும்.

இன்று முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் போது ,அவர்களுக்கு எதிராக விசமப் பிரசாரங்களை செய்வதுடன்,தமிழ் மக்களை தூண்டிவிட்டு மத ரீதியான பிரச்சினைகளுக்கு தூபம் இடுகின்றனர்.இவ்வாறு தழிழை தாய் மொழியாக பேசும் ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு அநியாயம் செய்து கொண்டு,தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கப் போவதாக இவர்கள் கூறுவது வேடிக்கையும்,வெகுலித்தனமும் கொண்டதாகும்.

தமிழ் மக்களுக்கு சரியான தீர்வொன்று தேவை அதனை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு போதும் முஸ்லிம்கள் தடையாக இருக்கமாட்டார்கள்,அதே போன்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற விடாமல் இருபது வருடம் செய்த அநியாயத்தையும்,விஞ்சி மீண்டும் தற்போது அதே பாணியில் இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பது,ஒரு போதும்,முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை தராது என்பதை திட்டவட்டமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பதிலளிக்கும் போது ,

13 வது திருத்தம் குறித்து பலரும் பேசுகின்றனர்,நாம் அரசாங்கத்தை உருhவாக்க பங்காளியாக செயற்பட்டவர்கள்,எமது கட்சி பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும்,அங்கு எங்களால் தயாரிக்கப்பட்டுள்ள வரைவுகளை சமர்ப்பிப்போம்.அதே போல்,வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களது மண்ணில் மீள்குடியமர்த்தப்படாத வரை வடமாகாண சபை தேர்தல் எந்த வகையி;லும் சாத்தியமற்றது என்பதையும் அமைச்சர் இங்கு வலியுறுத்திக் கூறினார்

No comments

Powered by Blogger.