Header Ads



அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் றக்பி கண்காட்சி


(எஸ்.எல். மன்சூர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் விளையாட்டுப்பிரிவினரால் நடாத்தப்படும் மாபெரும் றக்பி உதைப்பந்தாட்டக்கண்காட்சி நாளை (03.12.2012) பாலமுனை மின்ஹாஜ் பொது விளையாட்டுத் திடலில் வலயத்திலுள்ள பதினொரு பாடசாலைகளிலிருந்து 12 வயதிற்குட்பட்ட 226 மாணவர்களின் பங்குபற்றலுடன் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெறவிருப்பதாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் தெரிவித்தார். 

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம். காசீம் , உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளர் ஏ. அன்சில், பாலமுனை ஹிக்மாக வித்தியாலய விளையாட்டு ஆசிரியர் ஐ.எல்.எம். பாயிஸ் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் கிழக்குமாகாணத்திற்குப் பொறுப்பான அகில இலங்கை பாடசாலைகளுக்கான றக்பி உதைப்பந்தாட்டச் சம்மேளனப் பணிப்பாளர் திரு. நளீன் சில்வா, உதவியாளர் திரு. கருணாரத்னா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாலமுனை ஹிக்மா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் அம்பாந்தோட்டையில் இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் றக்பி போட்டியில் தேசிய ரீதியில் வெற்றிபெற்று ஜனாதிபதி முன்னிலையில் பரிசு பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் இவ்விளையாட்டை விருத்தி செய்யும் நோக்குடன் றக்பி போட்டிகள் நடாத்தப்பட்டு தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்கி, றக்பி விளையாட்டை முன்னெடுக்கவெனவும் இக்கண்காட்சி நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் பாலமுனை ஹிக்மா, ஹிதாயா, மின்ஹாஜ், இப்னுஸீனா, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி, அர்ஹம், அந்நூர், அறபா, அக்கரைப்பற்று அஸ் ஸிறாஜ், மத்திய கல்லூரி, திராய்க்கேணி ஆகிய பதினொரு பாடசாலைகள் இந்தக் றக்பி விளையாட்டில் பங்குபற்றவுள்ளன. என அல்ஹிக்மா பாடசாலையின் விளையாட்டு ஆசிரியரும், இதன் இணைப்பாளராக செயற்படும் ஐ.எல்.எம். பாயிஸ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.