Header Ads



கல்வியில் அதிக அக்கறை செலுத்தல் வேண்டும்.


(எஸ்.அக்தர்)

கல்வியில் அதிக அக்கறை செலுத்தல் வேண்டும். அப்போதுதான் நமது சமூகம் சுவிட்சமான எதிர் காலத்தை அடைந்து கொள்ள முடியும். இதனால்தான், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கு பல்வேறு எதவிகளைச் செய்து வருகின்றோம்.

இவ்வாறு சமூக சேவையாளரும், சவுதி அரேபியாவின் பொது மக்கள் தொடர்பு இணைப்பதிகாரியுமான ஐ.எல்.ஏ.மாஹிர் மாலை (23.12.2012) சம்மாந்துறை அஸ்-ஸமா வித்தியால மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களைவ வழங்கி வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சபூர்தம்பி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,

அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதன் நோக்கம் இவ்வாரான ஏழைச் சிறார்களின் எதிர் காலத்தை வளமுள்ளதாக மாற்ற வேண்டுமென்பதற்காகவே ஆகும். இதன் காரணமாகவே கடந்த மாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். ஏனக்கு இப்பிரதேச மக்கள் அதிகமான வாக்குகளை அளித்தீhகள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசியலில் வர வேண்டுமென்பதற்காக நான் ஒரு போதும் சமூக சேவையில் ஈடுபடவில்லை. அந்த எண்ணம் இல்லாத நிலையிலேயே எனது சமூக சேவையை செய்து கொண்டு வருகின்றேன்.

பிள்ளைகளை உலகக் கல்வியில் மட்டும் ஈடுபடுத்தாது, இஸ்லாமியக் கல்வியிலும் ஈடுபடுத்த வேண்டும். எமக்கு மறுமை வாழ்க்கை முக்கயமாகும்.
இறக்காமம், வரிப்பத்தான்சேனை, குடிவில் போன்ற பின் தங்கிய பிரதேச மக்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டுமென்பதற்காக கடந்த காலங்களில் பல சேவைகளைச் செய்து வருவதன் நோக்கம் அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதேயாகும்.

அரசியல் அதிகாரம் இல்லாது இவ்வாறு சேவை செய்து வரும் நாம், அந்த அதிகாரத்தை பெற்றுக் கொண்டால் இன்னும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்பதே எனது எண்ணமாகும். 










No comments

Powered by Blogger.