Header Ads



சட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர் தெரிவு - எதிர்த்து கையெழுத்து போராட்டம்


அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக பொறுப்பேற்றப் பின்னர், 2011 ஆம் 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக்கல்லூரிக்கான நுழைவு தேர்வில், அதிகளவிலான முஸ்லிம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளமை தொடர்பில், உரிய விசாரணைகளை நடத்தக் கோரி, பொதுமக்களிடம் மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கை நாளை மறுதினம் (28) கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சட்டக்ககல்லூரியின் நுழைத் தேர்வு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மகஜரில் பொதுமக்களின் கையெழுத்துக்கள் பெறப்பட்ட பின்னர், அது ஜனாதிபதிக்கும், சமய தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதேவளை நுழைவு தேர்வுக்கு தோற்றி தேர்ச்சி பெறாத மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.  gtn

No comments

Powered by Blogger.