யாழ். மாநகர சபை வரவுசெலவு திட்டம் நிறைவேறியது - முஸ்லிம் உறுப்பினர்களும் ஆதரவு
யாழ்.மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
யாழ் மாநகரசபை முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இன்று 10-12-2012 யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் விசேட வரவு செலவுத்திட்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, யாழ்.மாநகர சபை முதல்வரால் கொண்டு வரப்பட்ட 752.7 மில்லியன் ரூபாய்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 4 மேலதிக வாக்குக்களால் மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டது.
2009 ஆம் ஆண்டு 302.8 மில்லியனாகவும்,, 2010ஆம் ஆண்டு 307.1மில்லியனாகவும், 2011 ஆம் ஆண்டு 527.2மில்லியனாகவும் காணப்பட்ட யாழ் மாநகரசபையின் வருட வருமானம் 2013 ஆம் ஆண்டில் 752.7மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாகவும், இது மாநகரசபையின் அயரா முயற்சியின் பயனாக கிடைத்த வெற்றி என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment