மாத்தளையில் நிலத்துக்கு அடியில் துவாரங்கள் - ஆய்வில் உறுதி செய்யப்பட்டது
(sfm) தேசிய கட்டட நிலையம் மாத்தளை தொட்டகமுவ பகுதிக்கு சென்று தாழிறங்கியப் பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை 23-12-2012 ஆரம்பித்துள்ளது.
குறித்த பகுதியின் நிலத்துக்கு அடியில் துவாரங்கள் ஏற்பட்டுள்ளமை இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பிரதானி R.M.S.பண்டார தெரிவித்தார்.
இதற்கமைய குறித்த பகுதியிலுள்ள இரண்டு வீடுகளை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எதிர்காலத்தில் குறித்த பகுதியிலுள்ள கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு முன்னர் நிலத்துக்கு அடியிலான பகுதிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தேவை உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.
Post a Comment