Header Ads



தேவலாயத்திற்கு மதிப்பு குறைந்துவிடுமாம்..! லண்டனில் பள்ளிவாசல் விசாலமாக்குவதற்கு தடை


லண்டனின் கிழக்கு பகுதியில் தப்லிக் ஜமாஅத் தலைமையகத்தை (மர்கஸ்) விஸ்தரிக்கும் செயற்பாட்டுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் விசாலமாக மர்கஸ் அமைக்கப்பட்டால் அதன் அருகிலுள்ள சென்போல் தேவாலயத்திற்கு முக்கியத்துவம் குறைந்து விடுமெனவும், இதனமூலம் வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டிடங்களின் பெருமை குறைந்து போய்விடுமெனவும் நியூகாம் கவன்சில் நிர்வாகத்தினர் வாதிட்டுள்ளனர்.

எனினும் இடநெருக்கடியை நோக்கமாக கொண்டே மர்கஸ் விசாலமாக்கும் பணியை திட்டமிட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

தற்போது மஸ்ஜித் இல்யாஸ் என அழைக்கப்படும் மர்கஸில் 2500 பேரளவிலே தங்கியிருக்க முடியுமெனவும், இதனை 10.000 பேர் தங்ககூடிய வகையில் விசாலமாக்கும் வகையிலேயே முஸ்லிம்கள் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது 2000 மாம் ஆண்டில் சகல விதத்திலும் உதவிய தேவாலய நிர்வாகம் ஏன் இப்படி ஒரு நிராகரிப்பு(இக்கால கட்டத்தில் நான் UK இருந்தேன்)குர்ஆன்,ஹதீஸுக்கு மட்டும் மாரிவிட்டார்களோ என்னவோ?

    ReplyDelete

Powered by Blogger.