'முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட வெளிநாட்டு உதவி வருகிறதென விமல்வீரவன்ச கூறினார்' - ரவூப் ஹக்கீம்
(எ.எம்.எம். முஸம்மில்)
பதுளையில் முஸ்லிகள் தற்போது எதிர்நோக்கி உள்ள இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கையில் பிற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இனவாத செயற்பாடுகளுக்கும் வெளிநாட்டு உதவிகளே காரணம் என்று இவ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக உள்ள விமல் வீரவன்ச என்னிடம் தெரிவத்தார்.
இந்நாட்டின் எந்த ஒரு அரசாங்கமும் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. ஆகவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் இன்று இவ்வாறு சில தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் வீறுகொண்டு எதிர்க்க மாட்டாது என்றும் இச்செயற்பாடுகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கநேரிடும் ஆகவேதான் ஒரு அசட்டுத் தனமான தைரியத்தில் தமது தீவிரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் பதுளையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவேன். முஸ்லிம்களுக்கு எதிரான இவ் அசாதாரண நிலை நாடெங்கிலும் வியாபித்துள்ளது . என்று அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
பதுளைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தத வேளையில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும், பதுளை அல் அதான் மா. வி. யிலும் பதுள்ளை ஜூம்மாப்பள்ளியிலும் நடைபெற சந்திப்புகளிள் கருத்துகளை தெரிவிக்கும் போது மேற்படி கூறிய அமைச்சர் தொடர்ந்ததும் கருத்து தெரிவிக்கும் போது,
பதுளை முஸ்லிம்கள் ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாவிடினும் பல அபிவிருத்தி நிலைகளை எட்டியுள்ளனர். ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலையை சாமர்த்தியமாக பதுளை முஸ்லிம்கள் கையாண்டுள்ளது பாராட்டுகுரயது. இன்று ஒரு முஸ்லிம் மகளிர் கல்லூரியை பெற்றுக்கொள்ளவும் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் அல் அதான் மா வி யை சேர்க்கவும் உங்களால் முடிந்துள்ளது. ஆகவே இப்பாடசாலைகளின் எதிர்கால தேவைகளுக்கு நிச்சயமாக என்னாலான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு எழுத்தப்பட்ட பதுளை முளிம்கள் எதிர்நோக்கயுள்ள பொது பல சேனாவின் நெருக்குதல்கள் பற்றிய எழுத்துமூல முறைப்பாட்டின் பிரதியும் அதான் மா. வி. யின் கனிஷ்ட பிரிவிற்க்கான காணி யொன்னரின்தேவைப்பாடு அடங்கிய மகஜர் ஒன்ரையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் அமைச்சர் ஆக இருந்து செய்து காட்டிய ஒரு வெற்றி செயாலாவது உண்டா ? அப்புறம் எதுக்குப்பா வீண்வேல, கிழக்கு மாகாணத்த ஏமாற்றி எலெக்சன்ல வெற்றி பெற மட்டும் ஏலும். தன் கட்சிய காப்பாத்தவே தினம் தினம் போராடுகிற தலைவறுக்கிட்ட போய் ஊர காப்பாத்த னுமாமில்ல..........
ReplyDelete