Header Ads



இலங்கைக்குள் தோன்றியுள்ள சோதனைகளும், வேதனைகளும்!



(கழுகுப்பார்வை)

சின்னஞ்சிறு இலங்கைத்திருநாட்டில் கடந்த 1948க்கு முன்னர் இருந்த சோதனை வெள்ளையனை வெறியேற்றும் சோதனையாகும். பின்னர் பேரினவாதச் சோதனையின் தாக்கம் சிறுபான்மையினரை உடைத்து நொருக்கி மூவினமும் மூன்று திக்கில் சந்தேசகப்பார்வையுடன் வாழவேண்டிய கட்டாயச் சோதனை. இதனைத் தொடர்ந்து சுனாமி எனும்பேரில் மூவினத்தையும் ஒன்றுசேர்க்க இயற்கை நடாத்திய சோதனையில்       இணைந்தார்களா? இணையத்தான் விட்டார்களா? தனித்தரப்பு, தனிநாடு, யுத்தம், பேரழிவு, துப்பாக்கி, இறுதியில் முள்ளிவாக்காலில் சங்கமித்த தர்மசாஷ்சிரத்தின் செந்நிறக் குருதியுடன் முடிவுக்கு வந்தது என்று நிம்மதி விடுவதற்குள் மீண்டும் போராட்டச்சோதனை தொடர்ந்தது. 

அபிவிருத்தி என்கிறபேரில் மக்களை வாழவிடாது துரத்தித்துரத்திச் சோதனை. பொருளாதாரச் சோதனை, வாழ்வியலுக்கான போராட்டத்தில் மீண்டும் சோதனை. உணது மண்ணில் உண்னையும், உணதாரங்களையும் நான் வாழவிடவே மாட்டன்  என்று அடியோடு துரத்துகின்ற மாபெரும் சோதனை. இச்சோதனையில் யாழ்ப்பான மாணவர்களையும் இணைத்து மீண்டும் கைது என்றபேரில் சோதனை. இனங்களுக்குள் வித்தாகி பெரு விருட்சகமாக வளரவிட்டு இனமோதல் பிரச்சினை எதிலும் பழக்கப்பட்டுப் போன மனிதர்களுக்கு ஆறுதலாய் இருந்து  உண்ணுவதைக் கூட விடாது தூரத்திக் கொண்டே வருகின்றார்கள் பேரினவாதம் என்கிற சோதனை. இப்போது இறைவனும் பொறுமை இழந்துவிட்டான்போலும் இவர்களைத் திருத்தவேண்டுமென்றால் இயற்கையை விட்டாவது சோதிப்போம் என்று மழையை அனுப்பி சோத்திக்கிறான் இறைவன். 

எவ்வித பூச்சிக்கும் தீங்கு விளைவிப்பது பாவம் என்றுகூறும் புத்தர், அவரை விசுவாசிக்கும் மக்கள் ஏன் இப்படி சாவையும், மண்ணையும் விரட்டிவிரட்டி பிடிப்பதன் மர்மம்தான் என்ன? இறைவனின் திருவிளையாட்டை வானிலிருந்து அனுப்பியுள்ளான். மழை நீர் வெள்ளமாக பாய்கின்றது. இது வழைமையான நடைமுறைதான். வெண்மேகம் இருளாகி காற்றின் உதவியுடன் மழைபொழிவது இயற்கை விஞ்ஞானக் கோட்பாடு. ஆனால் இப்போது நடப்பதெல்லாம் புதுமையாக இருக்கின்றதே. மற்றவனுக்கு அநியாயம் நினைப்பவனை இறைவன் சும்மா விடமாட்டான் என்று முஸ்லீம்களின் வேதநூலான குர்ஆனும் எச்சரிக்கை செய்துள்ளது. மனிதன் மனிதனுக்கு செய்கின்ற கடமையை முறையாக செய்யவேண்டும். அநியாயமாக பாவம் செய்தால் அந்த மனிதனிடம் மன்;னிப்புக்கேட்காத பட்சத்தில் இறைவனும் மன்னிக்க மாட்டான் என்கிறது இஸ்லாம். 

மார்க்கங்கள் சமயங்கள் நல்லவைகள் பற்றித்தானே போதிக்கின்றது. அவ்வாறு நல்லமுறையில் நடக்காது விட்டாயானால் உம்மை நாம் இயற்கை கொண்டு அழிப்போம் என்கிற இறை கோட்பாட்டை நம்பும் மக்களாகவே நாம் இந்நாட்டில் வாழ்கின்றோம். இறப்பு என்று ஒன்று உள்ளது. யாரும் அதிலிருந்து தப்பவே முடியாது. ஆக 60 அல்லது எழுபது வருட வாழ்வு இதற்காக மாடமாளிகைகள் ஒருபுறம், அநியாயம் அக்கிரமம் ஒருபக்கம், நிம்மதியாக வாழவும் விடாது எவ்வளவு பாவமான காரியம். அதுதான் இன்று இறைவனும் தனது சோதனையை விட்டிருக்கின்றான் படிப்பினைக்காக.

அண்மைய நாட்களில் நடைபெற்றுக் கொண்டுவருகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் நேற்றையத்தைவிட இன்று புதுனமாகவே உள்ளது. சிவப்பு மழை பொழிகிறது. பின்னர் அது மஞ்சளாகவும் பொழிகிறது. மழையுடன் மீன், இறால், பணிக்கட்டிகளும் விழுகின்றன. அதுமட்டுமா ஜெலிபோன்ற கனமாக மழை என்றும் தொடர்ந்து பொழிகின்றது. இது நாளைக்கு கற்களாகவும் ஏன் நெருப்பு மழையாகவும் பொழியலாம். மக்கள் தங்களைத் திருந்தி இறைவனின் பக்கம் தன் முகத்தைத் திருப்பி நன்னெறியுடன் வாழவே இவைகள் நடக்கின்றன என்று யாராவது சிந்தித்தார்களா? பலர் சிந்திக்கின்றனர். ஆனாலும் சிலர் செய்கின்ற குரோதங்கள், இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் போன்றன இவ்விபரீதத்திற்கான காரணங்களாகவும் அமையலாம்.

'சத்தியம் எனும் விடயம் மறுக்கப்படுகின்றபோது மனிதரின் இருதயங்கள் அழும் ஆனால் சிலரின் இதயங்கள் ஏனோ மறுக்கின்றது' எனும் திருவாசகமும் உண்டு. கடந்த 2004இல் சுனாமியால் நாட்டை குறிப்பாக தெற்கிலும், விசேடமாக கிழக்கிலும் பலத்த அழிவை ஏற்படுத்தியது. வெள்ளமும், வறட்சியும் நாட்டு மக்களை வாட்டி புரட்டி எடுக்கிறது. பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நாடு அதளபாதாளத்தில் செல்கின்றது. பொருள்களின் விலையேற்றம், அரசியல் தலையீடுகளால் உந்தப்பட்டுப்போன நீதித்துறை சக்களத்தியாகி சரணாகதி அடைந்துள்ளது. பாதுகாப்பும், மனிதஉரிமைகளும் சீரழிந்து காணப்படுகின்றது. கல்விக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டது மட்டுமல்லாது கல்விமீதான மதிப்பம் மரியாதையும் எங்கோ ஓடி மறைந்து விட்டதுபோல இருக்கின்றது. இத்தனைக்கும் ஆப்பு வைப்பதுபோல இயற்கையின் அருள்மாரி தண்டனைமாரியாக மாற்றம் பெற்றுள்ளதோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

உலகம் அழிவை நோக்கிய பயணத்தில் பயனிப்பதற்கான அறிகுறிகள் சில தென்பட்டாலும் இலங்கை போன்ற நாடுகளில் சோதனைக்குமேல் சோதனையாக இயற்கையும், செயற்கையும் வந்துகொண்டே இருப்பதானது அழிவுக்கு வழிவகுப்பதாகவே அமைந்திவிடும். ஆட்சியாளர்களும், பெரும்பான்மையினரும் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும், சலுகைகளையும், நாட்டு மக்களுக்கான பொருளாதார விடுதலையையும் வழங்கி அனைவரும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக வாழத் தலைப்படுவதற்கு தலைமைத்துவமிக்கவர்களின் மனிதத்துவம் சிந்தனை செய்யவேண்டும். மனிதர்களுக்;;;குள்ளே இருக்கின்ற மிருகக் குணம் வெளிக்காட்டப்படுகின்றபோது அது சமூகத்தையும் பாதிக்கவே செய்யும். அன்னல் காந்தி ஒருமுறை மனிதனின் ஆத்மாவைப் பற்றி கூறும்போது 'ஆத்மா அழிவற்றதேயாகும். ஆனாhல் மனிதர்கள் செய்கின்ற தொண்டும், நற்செயல்களும் செய்வதை முன்னிட்டு ஆத்மா மென்மேலும் புதுப்புது உருவங்களை அடைகின்றது' என்று கூறுகின்றார். இருந்தாலும் ஆத்மா அழிவற்றதாக இருந்தால் மனிதர்களின் ஆத்மா என்றாவது ஒருநாள் ஒன்று சேர்க்கப்படுகின்றபோது நன்மை செய்யாது தீமையின் பக்கம் இருந்த ஆத்தமாக்கள் நிச்சயம் தண்டனை பெற்றே ஆகவேண்டும். இதுதான் நியதி.

இன்று இலங்கையில் நடப்பவற்றை அவதானிக்கின்றபோது ஆன்மீக வறட்சிக்கான ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது போலவே தென்படுகிறது. பேசுவதும், வேதம் ஓதுவதும் எனக்கல்ல உணக்குதானடி என்கிற கதைபோலதான் இன்றைய நடவடிக்கைகளும் தென்படுகின்றமை கவலை தரும் விடயமாகும். நெருக்கடிக்குமேல் நெருக்கடி ஆட்சியாளர்களையும் விட்டுவைத்ததா என்ன? எகிப்தில் தொடங்கிய போராட்டம் லிபியா, லெபனான், இன்று சிரியா வரையும் தொங்கிக் கொண்டு போகின்ற சோதனைதான் என்ன. அரசியல் பித்தலாட்டங்களை மக்கள் பொறுக்கமுடியாது வெகுண்டெழுந்தார்கள். முடிவுகளை நாம் பார்த்தோம். உலகையே ஆட்டிப்படைத்த ரஷ்யா இன்று அடியறுந்த மரம்போல தொங்கிக் கொண்டு நிற்கின்றது. உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவுக்கும் தற்போது இயற்கை சாவுமணி அடிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளம் என்றும், புயல் என்றும் இயற்கை சோதனை நடாத்துகின்ற இடமாக இன்று அமெரிக்கா மாற்றம் கண்டுள்ளது. இன்று இது எமது நாட்டையும் பீடிக்கும் நிலைக்குள் தள்ளப்படுவதற்கு யார் காரணம் என்பதை நாங்களாகவே சிந்திக்க வேண்டும். 

வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சிய கதைபோல சிலர் இன்று 13தேவையில்லை என்று பிதட்டுகின்றனர். பதின் மூன்று என்பது ஒற்றை எண்ணாக இருக்கலாம். ஒருநாடு இரண்டு மொழி பேசிப்பேசி வாழ்வையே சீரழித்து மிஞ்சிய இந்த ஒற்றை எண்ணையாது முறையாக தரப்படாது சுமார் 25ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. வடமாகாணத்திற்காக மக்கள் தெரிவு இன்னும் இல்லை. 13க்குரிய வடக்கும் கிழக்கும் உரிமையே இழந்து தவிக்கின்றபோது அந்தப் 13இனால் இலாபமீட்டிய அதேகும்பல் இப்போது வேண்டாம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம். இவ்வாறான அனைத்துச் சோதனைகளும் முக்குமுட்ட சாப்பிட்டவன் கதைபோல கழுத்துக் குழிக்கு வந்தன் பிற்பாடு ஒன்று சாவு அல்லது வைத்தியசாலை என்கிற நிலைமைதான் நமது நாட்டுக்கு வந்திருக்கி;ன்ற பிரச்சினை. இதற்கான கதவுகளை இறுக மூடிக் கொண்டதுதான் மிச்சம். 

எனவே, இன்றைய யாதார்த்தம் புரிந்து கொள்ளப்பட்டு இனத்துவ அடிப்படையிலான பிளவுகளை ஏப்பம் விடாது பாதுகாப்பது முச்சமூகத்தின் தலைவர்களதும் கடப்பாடாகும். முஸ்லீம் கட்சிகள் தங்களுக்குள்ளே ஆயிரம் பிளவுகள், தமிழர் கட்சிகளுக்குள்ளும் ஆயிரம் பிளவுகள். எட்டப்பர்களும், காட்டுமிராண்டிகளும் கூடவே பிறக்கின்றனர் என்பதை நினைவிற் கொண்டு அவர்களை நாம் மன்னித்து சோதனைகள் வருகின்றபோது இறைவனை நினைப்பது மாத்திரம் நமக்கு அழகல்ல. சோதனைக்கு முன்னர் அவர் கூறியது, இவர் கூறியனார் நாம்தான் பிழைவிட்டோம் என்று கையில் கனம் இல்லாதபோது கூறினால் அது எடுபடாது. கையில் கனம் உள்ளபோதுதான் வழியைத் தேடவேண்டும். நமது முன்னாள் ஜனாதிபதி அந்த அம்மையார் தற்போது கவலை கொள்ளும் அளவுக்கு நாடு பின்னடைந்து செல்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அன்று இந்தக் கவலை வந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அதிகார மமதை, வீராப்பு, தட்டிக் கழிக்கும் எண்ணம் போன்றவைகள் சேர்ந்து சுடுகாடாக்கியது எவ்வளவு கவலை தரும் விடயம் என்பதை இன்று நினைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. சோதனை வருகின்றபோது நினைப்பதைத் தவிர்;த்து சோதனைக்கு முன்னர் தம்மைத் தயார்படுத்துவதே சாலச்சிறந்தது. சோதனையின் தாக்கத்தை இன்றாவது சிந்திப்பார்களா? 

No comments

Powered by Blogger.