மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஹாபிஸ் நசீர் அஹமட் நேரில் சந்தித்தார்.
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கிராமிய கைத்தொழில், சுற்றுலா அமைச்சர் நசீர் அஹமட்; நேற்று விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
மாகாண அமைச்சர் ஏறாவூர் பிரதேசத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மிச்சி;நகர், தாமரைக்கேணி, ஹிதாயத் நகர், மீராகேணி, சதாம் ஹூசைன் கிராமம், ஐயங்கேணி உட்பட பல பகுதிகளு;ககு நேரில் சென்ற மாகாண அமைச்சர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி இயல்பு வாழ்க்கை பற்றி கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்த கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமட் அங்கிருந்து, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, எறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை துரிதப்படுத்தமாறு அவசர தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
ஏறாவூர் பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் விசேட திட்டங்கள் எதிர் காலத்தில் கொண்டு வரப்படுமென்றும் இதற்கென சிறந்த வடிகாலமைப்பு திட்டமொன்றினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் சந்தித்து வேண்டுகோள் விடுக்க இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதன் போது அம்மக்களிடம் மேலும் தெரிவித்தார்.
Post a Comment