அரசில் இருப்பதா..? இல்லையா..?? - முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் தீர்மானிக்கும் - ஹக்கீம்
(அஷ்ரப் ஏ. சமத்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளர் மாநாடு இன்று தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மண்டபத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. 25 மாவட்டங்களிலும் இருந்த கட்சியின் போராளர்கள் = கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பி.பகல் 7 மணிக்கு நிறைவுபெறறது.
அரங்கில் கட்சியின் செயலாளர் ஹசன் அலி கட்சியின் அறிக்கையை நாம் பார்க்கவேண்டுமானால் ஜேம்ஸ் பொன் பாணியில் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்றதாகும் 166 பக்கமாகும். இதில் அரசில் ஏற்படுத்திய பேச்சுவார்த்தை 3 தேர்தல்கள் மற்றும் அரசின் ஏமாற்றம் மற்றும் அமைச்சர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை பேச்சுவார்த்தை போன்ற்பல நிகழ்வுகள்அடங்கியுள்ளன. இதனை இரு வெட்டு வடிவில் தயாரித்து வழங்குவதாக தெரிவித்தார்.
பொருளார் தவிசாளர்களது உரைகளும் இடம்பெற்றன பி.பகல் அரங்கில் மர்ஹூம் மசுர் சின்னலெப்பை அரங்காக நடைபெற்றது. கட்சித் தொண்டர்கள் தமது உள்ளக் குமுறல்களையும், கட்சிக்கும் முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் திட்டமிட்டு அரசு மற்றும் அரசில் உள்ள ஏனைய அமைச்சர்கள் அரச அதிகாரிகள் செய்து வரும் தீங்குகளையும் குறிப்பிட்டனர்.
பதுளை குருநாகல் கண்டி கொழும்பு புத்தளம் களுத்துறை கம்பஹா போன்ற பிரதேச தொண்டர்களும் அரசு ஏனைய கட்சிகள் மற்றும் நாட்டின் இனத்துவேசம் பற்றி கூறினார்கள்.
மட்டக்களப்பு அம்பாறை திருமலை போன்ற மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு முதலமைச்சரினால் பழிவாங்கப்படும் விதம், அக்கரைப்பற்று சவுதி வீடமைப்புத்திட்டம், மன்னாரில் நிலவும் வெள்ளப்பெருக்கு அட்டாளைச்சேனையில் திட்டமிட்டு தேசிய காங்கிரஸ் பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம். போன்ற விடயங்களும் பேசப்பட்டன.
மட்டக்களப்பு அம்பாறை திருமலை போன்ற மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு முதலமைச்சரினால் பழிவாங்கப்படும் விதம், அக்கரைப்பற்று சவுதி வீடமைப்புத்திட்டம், மன்னாரில் நிலவும் வெள்ளப்பெருக்கு அட்டாளைச்சேனையில் திட்டமிட்டு தேசிய காங்கிரஸ் பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம். போன்ற விடயங்களும் பேசப்பட்டன.
கட்சித் தலைவர், தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும் அவர்களுக்கு எதிரான விமர்சனங்களையும் கட்சி போராளர்கள் கூறினர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலயமாக தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். அமைச்சர் ஹக்கீம், அடுத்த மாதம் நிறைவேற்றப்படுகின்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு கட்சி ஆதரிப்பதா இல்லையா என்று அடுத்த தினம் கூடும் உயர் பீட உறுப்பினர் கூட்டத்தின் போது 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு செயற்படுவது எனத் தீர்மாணம் எடுக்கப்படும்.
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு இன்னும் 2 வருடங்கள் காத்திருங்கள். அந்த முதலமைச்சரால் குச்சவெலி பிரதேசத்தின் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஒன்றும் செய்யமுடியாது. முதலமைச்சர் ஆசனத்தில் அவரை அமர்த்தும்போது அவர் முஸ்லீம் காங்கிரஸ் காரர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமர்த்தவில்லை அவர் எம்மோடு சேர்ந்து செயலாற்றுவார் என்றுதான் என்ணியிருந்தோம். எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசோடு சில விட்டுக்கொடுப்போடு தான் நாம் சோரம்போனோம் ஆனால் இங்கு கட்சித் தொண்டர்களது உள்ளக்குமுரல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து அரசில் இருப்பதா இல்லையா ? என்பதை அடுத்த மாதத்தில் உயாபீடம் தீர்மாம் எடுக்க வேண்டும்.
8 தீர்மாணங்கள் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றபட்டன.
8 தீர்மாணங்கள் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றபட்டன.
assalamu alaikum muslimkal onru paduvadu kalathin kattaya thevai
ReplyDeletefasmin. appadi oru alaippai intha manaaddil thalavar koduthirukka veendum but .......
ReplyDelete