Header Ads



வாகனப் பரிசோதனையின் போது இலஞ்சம்...! வாழைச்சேனையில் அடாவடி..!!

(அஹ்மட் லெப்பை ஜுனைத்தீன்)

நேற்று 28-12-2012 எனது மோட்டார் சைக்கிளின் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டி இருந்தது. முதலில் வாகனப்புகை பரிசோதனை. காலை 8.30லிருந்து 10.30வரை காத்திருந்தேன். இலங்கையில் ஒருவிடயத்திற்காக முழு நாளும் ஒதுக்க வேண்டிய இடங்களில் முதன்மையாக சலூன் கடையைத்தான் நான் கருதியிருந்தேன். நேற்றோடு அது பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது. 

எனக்கு முன்னாள் 5 வாகனங்களே பெரியசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த 5 வாகனங்களையும் பரிசோதனைக்கு முன் 10தடவையாவது  பரிசோதனை இயந்திரம் பழுதடைந்து திருத்தம் செய்யப்பட்டிருக்கும். நண்பர் ஒருவரின் வீட்டில் மரணச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவசரம் வேறு. அவங்களை ஸ்கேன் பன்னும் இயந்திரமும் பழுதடைந்து விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள். எத்தனையோ புகை பரிசோதணை நிலையங்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இது போன்ற மோசமான ஒன்றை இன்றுதான் பார்க கிடைத்தது.

வாகனம் என்றாளே காசுதான் என்பார்கள். வாகன லைசன்ஸ் முதல் ஆள்பதிவு லைசன்ஸ் வரை.. போக்குவரத்து பொலிசாருக்கென.. இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டு போனாலும் அப்பட்டியளில் புகைப்பரிசோதணை முகவர்களும் நேற்று என் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டனர். 

தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலை போலும். சனி ஞாயிரு தினங்களில்தான் இவர்கள் வாழைச்சேனையில் ஐஸ் பதனிடும் தொழிற்சாலைக்கு அன்மையில் வருகின்றார்கள். 1000கணக்கான வாகனங்கள் உள்ள இப்பகுதியில் நீண்ட காத்திருப்பு???. இப்பிரதேச முகவர்களிடம் ஏன் வழங்கப்பட்டு மக்களின் சிரமத்தை அரசு போக்க நடவடிக்கை எடுக்க முடியாது. 

வாகனப்பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தாலும் வாகன உரிமையாளர்களை தனியே அழைத்து உங்கள் வாகனத்தில் பெற்றோல் கூடுதலாக விரயம் செய்யப்படுகின்றது. இயந்திரத்தில் சத்தம் இருக்கின்றது என்றெல்லாம் கதைவிட்டு  ரூ.300, 400, 500 என பணம் கரக்கும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளி,சனி ஆகிய தினங்களில் இவர்கள் வருவதாக தகவல் கிட்டியது. வாகனத்தை பரிசோதிக்கும் போது அருகில் யாரும் நிற்க கூடாது. 

அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நம் பொறுப்பல்ல என அறிவித்தல் ஒட்டிக்கொண்டு வாகன உரிமையாளர்களையும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உதவியாளர்களாக பயன்படுத்துவதும் எரிச்சல் ஊட்டுவதாக அமைந்தது. நான் கானும் போது ஒருவர் தான் ரூ.200மாத்திரமே வைத்திருப்பதாக்  கூறி இருந்ததையும் பின்னர் குறித்த தொகை பணத்தை மரைத்து சென்றதையும் கண்டு கொண்டேன். எனது நண்பர் ஒருவர் படித்தவர். பாடசாலையில் கடமை புரிபவர். அவர் கூட 1000 ரூபாய் இலஞ்சமாக கொடுத்ததையும் இன்று காலையில் குறிப்பிட்டார். இவ்வாரான நடவடிக்கைகள் எப்போது தீரும்?? உரிய நடவடிக்கை யார் செய்வது???

No comments

Powered by Blogger.