Header Ads



கொழும்பில் ரன்சலு கண்காட்சி - அமைச்சர்கள் பஷில், றிசாத் ஆரம்பித்துவைப்பு



பண்டாரநாயக்கா மண்டபத்தில் டிசம்பர் 18ந் திகதி செவ்வாய்கிழமை ரன்சலு கண்காட்சியை ஆரம்பித்துவைத்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்  றிசாத் பதியுதீன் ஆற்றிய உரை
                            
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

எங்களது அமைச்சினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் 22வது 'ரன்சலு' கண்காட்சியில் இன்று உரையாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த ஆண்டு இலங்கை ஜவுலி மற்றும் ஆடைத்துறைகளின் வரலாற்றில் ஒரு மயில்கல் ஆண்டாகும். இந்த கண்காட்சியில் இந்த ஆண்டு முதல் கைத்தறிகள் மட்டுமல்லாது ஆடை, துணிகள் மற்றும் ஜவுலிகள் சேர்க்கப்பட்டு இந்த கண்காட்சி விரிவாக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நெசவுத்தொழிலை மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி சிந்தனைக்கமைய நாம் இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளோம்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கைத்தறி மற்றும் நெசவுத்துறையை அபிவிருத்தி செய்வதில் தொடர்ந்து வழங்கிவரும் உதவியை நான் இங்கு சிறப்பாக குறிப்பிடுவதுடன், முறைசாராத சிறிய மற்றும் மத்திய தொழில்முயற்சித்துறையை தேசிய  ஏற்றுமதிகளுடன் தொடர்புபடுத்துவதற்கு அவர் வழங்கிவரும் சேவை மகத்தானதாகும். சென்ற செப்டெம்பர் மாதத்தில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு எங்களின் ஆடை உற்பத்த்யின் ஏற்றுமதி பொருட்களின் எண்ணிக்கையை  8 மில்லியனாக அதிகரிக்கச ;செய்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்லாகும். 

எங்களால் தாபிக்கப்பட்ட உயர்மட்ட தேசிய கைத்தறி செயலணி தனது செயற்பாடுகளை சென்ற ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பித்துள்ளது. அதன் பிரதான நோக்கங்கள், எமது கைத்தறி நெசவுத் துறைக்கு மீளுயிர் அளிப்பதுடன், உலக சந்தையில் இலங்கை கைத்தறி நெசவுத்துணிகளுக்கு பாரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துவதுமாகும். அத்துடன், அரசாங்கத்துடன், தனியார் துறையையும் இணைத்து கைத்தறி நெசவுத்தரத்தை உயர்த்துவதும் இந்த செயலணியின் பணிகளில் ஒன்றாகும். 
இன்று இடம்பெறும் கண்காட்சி ஒரு முக்கியமான காலத்தில் நடைபெறுவதாகவே நான் கருதுகின்றேன். எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் இன்று உலகப்புகழ்பெற்றுள்ளதுடன், உலகத்தின் எல்லாப்பாகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. எமது நாட்டில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலைகள் உலகப்புகழ்பெற்ற வணிகச்சின்னங்களின் கீழ் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செம்டெம்பர் மாதம் வரை 2,789 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடைவகைகளை ஏற்றுமதிசெய்துள்ளோம். 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 16 வீத அதிகரிப்பை காட்டுகிறது. உலகில் மூன்றாவது பெரிய சில்லறை வியாபார நிருவனமாகிய  டெஸ்கோ 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடைவகைகளை நேரடியாக இலங்கையிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாக எனக்கு அறிவித்துள்ளது. கைத்தறி நெசவு உறிபத்திகளை பொருத்தவரையில் இலங்கை கைத்தறி நெசவுப்பற்றிய இப்போது இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் நோர்வே, நெதர்லாந்து, மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. 

இறுதியாக  எனது அமைச்சின் சார்பில் இக்கண்காட்சியை நடாத்துவதற்கு ஒத்துழைப்புவழங்கிய சகல பங்குதாரர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுவதுடன், விரிவாக்கப்பட்ட இந்த தேசிய கண்காட்சி எதிர்காலத்தில் ஒரு பிராந்திய கண்காட்சியாக மிளிருவதற்கு எனது மனதார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.