கலாநிதி எம்.எஸ்.எம். அனஸின் உரைக்கு மறுப்பு..!
(சுவைர் மீரான்)
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யானான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
இவை அல் குர் ஆனின் ஸூரத்துஷ்ஷுஃரா, அதாவது கவிஞர்கள் என்ற அத்தியாயத்தின் 221 முதல் 224 வரையான வசனங்கள் ஆகும்.
இந்த வசனங்களை இங்கே குறிப்பிடக் காரணம், மாவனல்லையில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில், கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் என்பவர் தனது உரையில் தெரிவித்து இருந்த சில கருத்துக்கள் இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளுடன் முரண்பட்டு நிற்பதனால் ஆகும்.
யாழ் முஸ்லிம் இணையத்தில் "எமது வரலாற்று வீழ்ச்சிகளை நாமே உருவாக்குகிறோம்" என்ற தலைப்பில் மேற்படி உரை வெளியாகி இருக்கின்றது.
கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் என்பவரின் இஸ்லாமியப் பின்னணி குறித்து அறிய முடியாவிட்டாலும், அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமான ஒன்றை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன.
சில வருடங்களுக்கு முன்னர் சந்தித்த பல்கலைக் கழக மாணவர் ஒருவர், தனது முஸ்லிம் விரிவுரையாளர்களில் ஒருவர், மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என்ற கருத்தில் மிகவுமே ஊறிப்போய் இருப்பதாகவும், சில குர் ஆன் வசனங்களை தனக்கு சாதகமான விதத்தில் மாற்றி அர்த்தப்படுத்திக் கொண்டு தனது கருத்தை நிறுவ முற்படுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
கற்றவர்கள் என்று சமூகத்தில் அறியப் படுகின்றவர்கள், இஸ்லாத்தை, இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணாக விளக்க முற்படும் துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஆரம்பமாக இஸ்லாமல்லாத எதோ ஒரு துறையில் ஆழமான கல்வியை பெறுகின்றனர், கற்கும் அனைத்து விடயங்களையும் அப்படியே நம்புகின்றனர், தாம் கற்ற துறைதான் மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்றும் உறுதியாக நம்ப வைக்கப்படுகின்றனர், இப்படியான ஒரு பின்புலத்துடன் இஸ்லாத்தைப் பார்க்கின்றனர், அவர்கள் கற்ற கல்விக்கு உடன்படாத, புரியாத விடயங்களை எல்லாம் இஸ்லாத்தினின்றும் நிராகரிக்கின்றனர் அல்லது முரண் விளக்கம் அளித்து தமது அறிவு, அல்லாஹ்வின் அறிவை விட சிறந்தது என்று சொல்லாமல் சொல்லும் அபாயகரமான நிலைக்கு தம்மையறியாமலே தள்ளப்படுகின்றனர்.
இஸ்லாத்தை நபி (ஸல்) அவர்கள் போதித்த அடிப்படையில் முறையாகக் கற்று, அந்த அடித்தளத்தில் இருந்துகொண்டு ஏனைய துறைகளை நோக்குவதை விடுத்து, ஏதாவது ஒரு துறையை நன்றாகக் கற்று அதில் முற்றாக மூழ்கி முழுவதுமாய் ஊறிய நிலையில் இஸ்லாத்தை பார்க்கின்றனர், இஸ்லாத்தை தமது துறை சார் அறிவுக்கு ஏற்ப புரிந்து கொள்ள முயல்கின்றனர், அதனையே அடுத்தவர் மீதும் திணிக்க முயல்கின்றனர்.
கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் என்பவரின் உரையும் இந்த யதார்த்தத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து வரிக்கு வரி மறுப்பு எழுதுவதனை விடுத்து, இஸ்லாமிய வழிகாட்டல்களுடன் ஒத்துவராத ஒரு சில முக்கிய விடயங்களை மட்டுமே சுட்டிக் கட்ட விரும்புகின்றேன்.
இலக்கியம், கலை என்பவற்றை விட்டும் முஸ்லிம்கள் தூரமாகுவது முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கும், இன்று முஸ்லிம்கள் இலங்கையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகும் என்ற தோற்றப்பட்டை அவரது உரையின் சாராம்சமாக காண முடிகின்றது. இது, அவர் தான் சார்ந்த துறைக்குள், அல்லது தனது ரசனைக்குள் சிந்தனைகளை மட்டுப்படுத்திக் கொண்டு சமூகத்தைப் பற்றி சிந்திப்பதன் வெளிப்பாடே தவிர, நிதர்சனம் அல்ல.
இன்று முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் முஸ்லிம்களை பற்றிய போதிய இலக்கியம் சார் அறிவின்மை காரணமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறுவது, இனவாத செயற்பாடுகள் குறித்த ஆழமான பார்வை இல்லாமையையே வெளிக்காட்டுகின்றது. ஒரு ஓநாய் ஒரு ஆட்டை வேட்டையாடுவது என்று தீர்மானித்த பின்னர், ஆட்டிடம் சென்று, "நீ இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்னை கொம்பால் குத்தினாய்" என்று வம்புக்கிழுத்த பொழுது "நான் பிறந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன" என்று ஆடு சொல்ல அப்படியானால் அது உனது தகப்பன், அதுவும் இல்லை என்ற பொழுது உனது பாட்டன் என்று கூறி தனது செயலை நியாயப் படுத்திய ஓநாய் ஆட்டை வேட்டையாடியதாக ஒரு கதை சொல்கிறது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளும் இதே அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. நியாயமான சட்டரீதியான அனுமதிகள், அறிவியல் காரணிகள், வரலாற்று உண்மைகள் போன்றவையே இனவாதிகளால் கணக்கிலெடுக்கப் படாத நிலையில், கற்பனைகளையும், பொய்களையும் தாங்கி வரும் கவிதைகளும், நாவல்களும் நிலைமையை மாற்றும் என்று நம்புவது, சுடர் விட்டு எரியும் அடுப்பில் வேகவைத்தும், வேகாத உணவை, கைகளைத் தேய்த்து சூடு உண்டாக்கி அந்தச் சூட்டில் வேக வைத்து உண்ண நினைப்பது போன்றதாகும்.
ஒவ்வொருவரும் தமக்குத் தமக்குத் தெரிந்த வரையறைகளுக்குள் இருந்துகொண்டு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேட முனைகின்றார்களே தவிர, இஸ்லாத்தின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகி, நம்மை (முடிந்தவரை) முழுமையான முஸ்லிம்களாக மாற்றி அதன் மூலம் வெற்றி பெற முயல்வதில்லை. நம்மை முழுமையாக முஸ்லிம்களாக மாற்றி, அதன் மூலம் இஸ்லாத்தின் பாதையில் வாழ்ந்து சுவர்க்கத்தின் வெற்றியாளர்களாக மாறுவதற்கான வாழ்க்கையை விடவும், தமக்குத் தமக்குத் தெரிந்த காரணங்களைக் கூறி நியாயப் படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கை இவ்வுலகத்தில் இலகுவானதாக காட்டப்பட்டு இருப்பதனால், அனேகரது சிந்தனைகள் அந்த வழியிலேயே செல்கின்றன.
அண்மையில் தனது முக நூலில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னால் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், 6131 வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி வேட்பாளருமான ஐத்துரூஸ் இலியாஸ், முன்னர் திங்கட்கிழமை பாத்திஹா, வெள்ளிகிழமை சலவாத்து என்று ஏதேதோ எல்லாம் வீடுகளில் ஒதப்பட்டன, அப்பொழுது வீடுகளில் சாம்பிராணி, சந்தனக் குச்சி போன்றவை புகைக்கப்பட்டன, இப்பொழுது அவையெல்லாம் மார்க்கத்தில் இல்லை எனக் கூறி நிறுத்தி விட்டார்கள், ஆகவே நுளம்புகள் புத்தளத்தில் அதிகரித்து விட்டன என்றொரு நகைப்பிற்கிடமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
தனக்குப் பிடித்த, அதே நேரத்தில் மார்க்கத்திற்கு முரணான ஒரு விடயத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, அதனை யதார்த்தத்தில் இருக்கின்ற ஒரு பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கின்ற தன்மையை தெளிவாக காணக் கூடியதாக உள்ளது.
மது அருந்துவதில் பிரியமுள்ளவர்கள் நுவரெலியாவிற்குச் சென்று, "குளிர் அதிகமாக இருக்கின்றது, ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று போலிக் காரணத்தைக் கூறி, தமது மது வெறியைத் தீர்த்துக் கொள்வது போன்று, சமூக விடயங்களில் செயல் பட முனைவது வரவேற்கப் பட முடியாத ஒன்றாகும்.
முஸ்லிம் சேவை வானொலி நாடகங்கள், சீறாப் புராணம் போன்றவை முஸ்லிம்களிடமிருந்து தூரமாக்கப்படுவது குறித்தும் ஆதங்கப் பட்டுக் கொள்கின்றார் கலாநிதி அனஸ் அவர்கள்.
முஸ்லிம் சேவை நாடகங்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளுடன் எந்த அளவு முரண்பட்டு இருந்தன என்பது அந்நாட்களில் மேற்படி நாடகங்களையும் "ஊடுருவல் சமூகச் சித்திரம்" போன்றவற்றையும் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு முஸ்லிம் வீட்டின் சமையலறையில் நடக்கின்ற விடயங்களை, போலியாகக் கற்பனை செய்து, சமூகத்தின் மானத்தை காற்றில் பறக்கவிடும் வடிவில், மகரங்கள் பேணப்படாத உறவுகள் உரையாடும் வகையில், வீணான உணர்ச்சிகளை ஊட்டிய வசனங்கள், குரல் ஏற்றத் தாழ்வுகளுடன், ஆண்களும் பெண்களும் சேர்ந்துகொண்டு இஸ்லாமிய விதிமுறைகளை மீறும்படியான வகையில் மேற்படி நாடகங்கள் காணப்பட்டன.
இவ்வாறான நாடகங்களை ஒலிபரப்புவதனை விட, பெறுமதியான மார்க்க உபதேசங்களை, குர் ஆனுடைய வசனங்களை ஒலிபரப்ப குறித்த நேரங்களை ஒதுக்குவது உள்ளங்களுக்குப் பயனளிக்கும்.
சீறாப்புராணம் போன்ற இலக்கியங்கள் நபிகளாரின் பெயராலேயே பொய்களையும், கற்பனைகளையும் இட்டுக் கட்டுக்களையும் அருவருக்கத் தக்க வர்ணனைகளையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவை சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கப் பட வேண்டியவை ஆகும். பாடசாலை நாட்களில் தமிழ் பாடத்தில் படித்த பொழுது, சீறாப் புராணத்தில் இடம்பெற்றுள்ள, நபிகளாரின் தாயார் கருவுற்றிருந்தமை குறித்த கற்பனை நிகழ்வகளும், அவர்களின் தாயாரின் வயிற்றைப் பற்றிய வர்ணனைகளும் ஒரு முஸ்லிமுக்கு அருவருப்பூட்ட்பவையாக இருந்தன. இவற்றையா கலாநிதி அனஸ் அவர்கள் மீண்டும் சமூகத்தில் ஹயாத்தாகக் வேண்டும் என்று விரும்புகின்றாரா?
இலக்கியம் என்ற பெயரில் வால்மீகி எழுதிய ( கம்பன் தமிழுக்கு மொழிபெயர்த்த) இராமாயணம் என்ற பச்சைப் பொய்தான், முஸ்லிம்களின் பாரம்பரிய இடமான பாபரி மஸ்ஜித் தகர்க்கப்படவும், பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பாரதம் முழுவதும் படுகொலை செய்யப்படவும், கொலை வெறி நரேந்திர மூடியின் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிபீடமேறவும் காரணமாக அமைந்தது என்கின்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
பண்டைய இலக்கியத்தில் சிறந்து விளங்கிய கிரேக்கத்தில், அண்மையில் பாரிய நிதி நெருக்கடிகள் வந்த பொழுது ஹோமரின் இலக்கியங்கள் கிரேக்கத்தை நிதிநெருக்கடியிலிருந்து காக்க என்ன செய்தன?
ஒரு சமூகத்தின், தேசத்தின் வல்லமை என்பது அதன் பொருளாதார ஸ்திரத்தன்மை, அறிவுத்திறன், தொழில் நுட்ப வளம், இராணுவ பலம், உற்பத்திகள் போன்ற காரணிகளில் தங்கியுள்ளதே தவிர, கற்பனை இலக்கியத்தில் தங்கியிருப்பதில்லை என்ற யதார்த்தத்தினை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு இலக்கியத்தில் தீர்வு தேட முனைவது, "பசித்த தட்டான் பழைய கணக்குப் பார்த்தானாம்" என்பதற்கு ஒப்பான ஒன்றாகும்.
நம்மை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும் இஸ்லாத்தின் அடிப்படைகளை பின்பற்றி, பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டுமே தவிர, பொய்களால் வார்த்தை ஜாலம் காட்டும் இஸ்லாத்திற்கு முரணான இலக்கியங்களிடம் மண்டியிடக் கூடாது.
Really tnx br...
ReplyDeleteWell done
ReplyDeleteBr.Suvair Meeran deserves double Phd .
ReplyDeleteWell done
சுவைர் மீரான் கூறும் சில விடயங்கள் உண்மையாக இருந்த போதிலும் பலவிடயங்களில் அதிக பிரசங்கித் தனம் காணப் படுகிறது. இல்யாஸ் டாக்டர் கூறிய கருத்துக்களில் எந்த நகைப்பும் இல்லை. ஆனால் திங்கள் கிழமை பாதிக்க ஓதுவது வியாழன் இரவு சலவாத்து சொல்வது மார்கத்துக்கு முரணானது என எழுதியுள்ள மீரான் வாசகர்களை வழிபிரலச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சூரதுல் பாதிகாவை ஓதுவதும் நபி பெயரில் சலவாத்து ஓதுவதும் மார்கத்துக்கு முரணான செயல் என்று எங்காவது கூறப் பட்டுள்ளதா? இவரது கருத்துக்கள் முட்டாள் தனமானவை. யாழ் முஸ்லிம் இணையம் இந்த விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலில் இவர் தான் யார் உலமாவா அல்லது என்ன தொழில் செய்கின்றார் என்பதை கூராடும். இவருக்கு அனீஸ் விரிவுளையலரின் கருத்துக்கு மறுகருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது, மார்க்க விடயங்கள் எது சரி எது பிழை என்பதை கூற இவர் யார்.
ReplyDeleteநபி மீது நானும் சலவாத்து சொல்கிறேன் . நீங்களும் சலவாத்து சொல்லுங்கள் என்று அல்லாஹ் முஸ்லிம்களை பார்த்து கட்டளையிடுகின்றான். வெள்ளிக் கிழமை இரவுகளிலும் திங்கள் இரவுகளிலும் நபியுடைய உம்மத்து செய்யும் அமல்கள் நபிக்கு காண்பிக்கப் படுகின்றது. இந்த அமல்கள் குறைந்து மனிதர்கள் நாடகங்களிலும் தொலைக் கட்சியிலும் தமது நேரத்தை செலவளிப்பதாலோ என்னவோ நுளம்புகள் இன்று மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கின்றன.
நுளம்புத் திரிக்கு எவ்வாறு நுளம்புகள் ஓடுகின்றனவோ அதே போன்று சாம்பிரநிக்கும் சந்தன குச்சியின் புகைக்கும் நுளம்புகள் விரைந்தோடும். வேண்டுமென்றால் பரீட்சித்துப் பாரும் சுவைர் மீரானே.
சகோதரர் முஹம்மத் இர்பான்,
ReplyDeleteஅதிக பிரசங்கித்தனம் காணப்படும் அந்த 'பல விடயங்கள்' எவை என்பதனை கோடிட்டு அவற்றில் காணப்படும் அதிக பிரசங்கித்தனங்களையும் குறித்துக் காட்டினால், அவை குறித்து கவனம் செலுத்த முடியும். அதை விடுத்து நுளம்புக்கு சந்தனக் குச்சி பற்றவைப்பது போன்ற செயலை ஒத்த வார்த்தைகள் ஊடகங்களில் எத்தகைய பெறுமதியுமற்றவை.
"திங்கட்கிழமை பாத்திஹா, வெள்ளிக்கிழமை சலவாத்து என்று ""ஏதேதோவெல்லாம்"" வீடுகளில் ஓதப் பட்டன" என்பதை ஒழுங்காக வாசித்துப் புரிந்து கொண்டால், நீங்கள் எழுதியிருப்பதில் எந்தவித அர்த்தங்களுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். சந்தனக்குச்சி, சம்பிராணியுடன் அன்று ஓதப்பட்டவை சூரத்துல் பாத்திஹாவும், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த சலவாத்தும் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது புரிகின்றது, ஆகவே புரிந்து கொள்ளுவதில் உங்களுக்கு உள்ள குறைபாட்டை சரி செய்துகொள்ளுங்கள்.
மார்க்க விடயங்களில் சரி பிழை கூற நான் யார் என்று கேட்கும் நீங்கள் யார் என்பதை எண்ணி வியக்கின்றேன்.
ஹராம், ஹலால் என்பது மார்க்க விடயம். சாராயம் அருந்துவதும், கஞ்சா புகைப்பதும் ஹராம்.
உழ்கியா பிராணியின் மாமிசம் ஹலால். இவற்றில் கூட சரி பிழை கூற முடியாதா? பொது பல சேனா ஹலால் சான்றிதழை எதிர்ப்பது பூன்றல்லவா இருக்கின்றது உங்கள் வார்த்தைகள்.