காத்தான்குடியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
(அப்துல் ஆலிம் லெப்பை)
காத்தான்குடி அஷ்ஷூப்பான் நலன்புரிச்சங்கத்தின் தவிசாளர் டாக்டர் மௌலவீ யு. அப்துர் றஊப் (மிஸ்பாஹி – பஹ்ஜீ ) வேண்டுகோளுக்கிணங்க அவ்வமைப்பு ஏற்பாடு செய்த 1000 வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சட்டத்தரணி எம்.ஐ.எம்.அஜ்மீர் தலைமையில் காத்தான்குடி-5 பதுரிய்யஹ் ஜூம்அஹ் பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லிபாறூக், காத்தான்குடி பிரதி நகரபிதா எம்.ஐ.ஜெசீம் மௌலவிகளான எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வி, மஜீத் றப்பானி, KRM. ஸஹ்லான் றப்பானி BBA உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம், காங்கேயனோடை, பாலமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.
Post a Comment