ஈரானிய போர் கப்பல்கள் சூடான் நாட்டுக்கு விரைவு
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டின் போர்ட் சூடான் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் விரைந்துள்ளன. கடந்த இருமாதங்களில் சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு ஈரானிய போர்க்கப்பல்கள் வந்துள்ளது இது இரண்டாவது முறையாகும்.
நேச நாடுகளுடனான கடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கையாக இந்த வருகை இருக்கிறது என்று ஈரான் கூறியுள்ளது. பிராந்திய மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என்று அது கூறியுள்ளது.
4 நாட்கள் இங்கு தங்கும் போர்கப்பல்கள் எங்கள் நாட்டு கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று சூடானும் கூறியுள்ளது. சூடானின் வெடிமருந்து தொழிற்சாலையின் மீது சமீபத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்று சூடான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மிக விரைவில் செருப்படி வாங்கும்
ReplyDeleteஈரானின் பரம எதிரி இஸ்ரேலா? ? ?
ReplyDeleteinsha allah israil alium
ReplyDelete