இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் ஒன்றுகூடல் நிகழ்வு ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் நாளை, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை இல 31 - 1/1 42 வது லேனில் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் நடைபெறவுள்ளது.
'போருக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலில் மாற்றம் அவசியமா?' எனும் தலைப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் உரையாற்றவுள்ளார்.
ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், முஸ்லிம் படைப்பாளிகளின் போர்க்கால இலக்கியம் எனும் தலைப்பிலும் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment