ஆங்கிலேயரின் பாவனைகளை பின்பற்றுவதால் வெள்ளையர்களாக மாறிவிட முடியாது
'நாய்களை வளர்ப்பது வெள்ளையர்களின் வழக்கம். இதை கருப்பர்கள் பின்பற்றுவது நல்லதல்ல,'' என தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா, ஆங்கிலேயர்களிடமிருந்து, 1994ல் சுதந்திரம் பெற்றது. நெல்சன் மண்டேலா தலைமையில் போராடி அந்நாட்டு மக்கள் விடுதலை பெற்றனர். ஆனால், இன்னும் அவர்களுக்கு ஆங்கிலேயர்கள் மீதான கோபம் தணியவில்லை. தென் ஆப்ரிக்காவின், தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா.
தென் ஆப்ரிக்காவில் நடந்த, ஒரு நிகழ்ச்சியில், பழங்குடியினர் உடையில் வந்து, அதிபர் ஜுமா பேசியதாவது,
மைனாரிட்டிகளான, ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளை பின்பற்றுவது தான் நாகரிகம் என்ற, கருத்தை இளைஞர்கள் விட்டொழிக்க வேண்டும். சுருண்ட கூந்தலை நீட்டிக்க, வாசனை களிம்புகளை தடவுவதால், நீங்கள் வெள்ளையர்களாக மாறி விட முடியாது.
வீட்டில் நாய் வளர்த்து, அதை, "வாக்கிங்' கூட்டி செல்வது, அதை குளிப்பாட்டுவது, டாக்டரிடம் அழைத்து செல்வது என்பதெல்லாம், ஆப்ரிக்க மக்களுக்கு அழகல்ல. தன் வீட்டில் நோயுற்ற மனிதரை கவனிக்காமல், நாய்க்கு உடம்பு சரியில்லை என்பதற்காக அதை மருத்துவமனைக்கு கூட்டி செல்வது மனிதாபிமானமற்ற செயல். நான் இதை சொல்வதால், விலங்குகளை எதிர்க்கிறேன் என்று பொருள் அல்ல;மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று தான் வற்புறுத்துகிறேன்.பிரச்னைகளுக்கு ஆப்ரிக்கர்களின் வழியில் தான் தீர்வு காண வேண்டும். இதற்காக வெள்ளையர்களின் வழியை பின்பற்றக்கூடாது.இவ்வாறு ஜுமா பேசினார்.
Post a Comment