பிரதம நீதியரசர் ஷிராணி மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் சந்திப்பு
(கண்டியிலிருந்து ஜே.எம்.ஹபீஸ்)
பிரதம நீதி அரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கா கண்டி ஸ்ரீ தலதா மாளிகைகு விஜயம் செய்தார். ஸ்ரீதலதா மாளிகையில் சமயச் சடங்குகளில் கலந்து கொண்ட பின் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சந்தித்தது நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார்.
மல்வத்தை மகாநாயக்கா தேரர் திப்படுவாவே ஸ்ரீசுமங்கள, மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த ஆகியோர்களையும் தமது கணவர் பிரதீப் காரிய வசம், மற்றும் தனது புத்திரர்; சகிதம் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் பிரதம நீதியரசருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment