Header Ads



சட்டவிரோத இஸ்ரேலுக்கு தூதுவரை நியமித்துள்ள ஜனாதிபதி மஹிந்த (படம்)


சட்டவிரோத இஸ்ரேல்  நாட்டுக்கான புதிய தூதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ளதுடன், அவருக்கான நியமனத்தையும் இன்று புதன்கிழமை, 12 ஆம் திகதி வழங்கியுள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவராக சரத் விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

சட்டவிரோத இஸ்ரேலை இலங்கை முஸ்லிம்கள் எவரும் அங்கீகரிக்காத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சட்டவிரோத இஸ்ரேல் நாட்டிற்கு இலங்கை தூதுவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல வருடங்களாக இலங்கை - பலஸ்த்தீன் நட்புறவு சங்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்துவந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.




3 comments:

  1. இவர் தான் இலங்கை-பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராம்; இவரே வழிந்து இஸ்ரேலை நேசநாடு என்கிறார் தூதுவரெல்லாம் நியமிக்கிறார் இதில் எது சரி...! இலங்கை பாலஸ்தீனின் நண்பனா? அல்லது இஸ்ரேலின் நன்பனா ?? இவர் 2005 ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் நண்பனாகவும் முஸ்லிம்களின் பாதுகாவலனாகவும் தன்னை காட்டிக்கொண்டு முஸ்லிம்களின் வாக்குவங்கியை குறிவைத்தார் பின்னர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி, மதவெறி,கலவரங்கள் நடப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருக்கிறார்.

    இவர் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைக் கோரினார். அவை விசுவாசமாக நடந்தன.. அதனால் தப்பினார். அதற்கு கைமாறாக இலங்கையில் பௌத்த இனவெறியர்களால் (தம்புள்ளை )முஸ்லிம்களின் இறையில்லம் தீக்கிரையான போது ஒன்றும் தெரியாத பாலகனைப்போல மௌனம் காத்துவிட்டு, ஓரிரு வாரங்கள் கழித்து தம்புள்ளைக்குச் சென்று ரங்கிரி (?) புனித பூமியின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் முழுஆதரவும் வழங்கப்படும் என வாக்குறுதியளித்து சட்டவிரோத வழிபாட்டுத்தலங்கள் (முஸ்லிம்களின் பள்ளிவாசல் ) நீக்கப்படும் என்று முஸ்லிம்களுக்கு இன்ப அதிர்ச்சி கலந்த கைமாறு செய்தார். இன்னும் என்னென்ன செய்யபோகிறாரோ... ! முஸ்லிம் தலைவர்களே, புத்திஜீவிகளே, பொதுமக்களே, நாம் அனைவரும் வழமை போல் கைகட்டி மௌனம் காத்து வேடிக்கை பார்போம் இன்ஷா அல்லாஹ்...! நமக்கென்ன எங்கள் வீட்டையா உடைத்தான்? இல்லை எமது குடும்பத்தையா குறிவைத்தான் ?? இல்லாவிட்டால் எமது சொத்துக்களா சூறையாடப்படுகின்றன ??? இல்லவே இல்லை. எனவே வழமை போல் இருந்து விட்டுப் போய்விடுவோம்....!!!

    ReplyDelete
  2. எல்லாவற்றிக்கும் ஆமா சாமி ( இரட்டை வேஷம் ) போடும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் உயர் பதவிவகிக்கும் முஸ்லீம் தலைவர்களும் இருக்கும்வரை இலங்கை முஸ்லிம்களின் நிலைமை பரிதாபத்துக்கும் அநியாயத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியதுதான் யார் சொல்லியும் எதுவும் நடக்கபோவது இல்லை. ஆனால் இதற்கு அவர்கள் பல்வேறு பதில்களை சொல்லி பாமர மக்களை ஏமாற்றுவது மட்டும் உண்மை.

    ReplyDelete
  3. Rauf hakeem, Ishad badudeen and our other government ministers can say even a word agains this?????? Sri lankan Muslims must think about this government and our Muslim ministers, all Muslims have to think twice in othe election, Allah knows everything.

    ReplyDelete

Powered by Blogger.