ஏழையாகி விட்டதாக கவலைப்படும் பிரான்ஸியர்கள்..!
பிரான்ஸ் நாட்டில் உள்ள, பெரும்பாலான மக்கள், தங்களை ஏழைகளாகக் கருதுகின்ற னர்.உலகின் வளர்ந்த நாடுகளாகக் கருதப்பட்ட,ஐரோப்பிய நாடுகள்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.வேலையில்லா திண்டாட்டம், ஆட்குறைப்பு, மானியங் கள் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளால், அவதியுறும் ஐரோப்பிய மக்கள், தாங் கள் ஏழைக ளாகி விட்டதாகக் கருதுகின்றனர்.ஐரோப்பிய வர்த்தக பத்திரிகை இது குறித்து சமீபத்தில், ஆய்வு மேற்கொண்டது.
மாதச் சம்பளம் வாங்குவோர், கைத்தொழில் செய்வோர், தற்போதைய பொருளாதார நெருக் கடியால் தாங்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளனர். டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளாக இருப்பவர்கள், தாங்களும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் உள்ள, 50 சதவீதம் பேர், ஏழையாகி விட்டதாகவும், இன்னும் நிலைமை மோசமாகி விடுமோ என்று பயப்படுவதாகவும், கருத்து தெரிவித்துள்ளனர்.
Post a Comment