Header Ads



யாழ்ப்பாணத்தில் பரீட்சார்த்த கறுவா பயிர்ச்செய்கை ஆரம்பம்


யாழ். மாவட்டத்தில் பரீட்சார்த்தமாகக் கறுவா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலணை, புங்குடுதீவு, மருதங்கேணி பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் மூலம் கறுவாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கறுவாப்பயிர் அதற்கான இரசாயன உரப்பசளை என்பன வழங்கப்பட்டு பயிர்ச்செய்கை தொடர்பான தொழில் நுட்ப ஆலோசனைகளையும் யாழ் மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட கறுவாப்பயிர்ச்செய்கை எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலைத்தரும் இடத்து கணிசமான அளவு விவசாயிகள் கறுவாப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர்.

கறுவாப்பயிர் நல்ல விளைச்சலை யாழ்.மாவட்டத்தில் தரும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் இரண்டு வருடங்களில் கறுவா மரத்தில் இருந்து அறுவடையை மேற்கொள்ளலாம் என்றும் பரீட்சார்த்த பயிர்ச்செய்கைக்கு கடற்கரை சுவாத்தியம் உள்ள பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

வீடுகளில் கறுவாப்பயிரை நட்டு வளர்க்க விரும்புபவர்கள் யாழ்.மாவட்ட விவசாய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் கறுவா நாற்றுக்களை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற யாழ். மாவட்ட விவசாய திணைக்கள பாடவிதான அபிவிருத்தி அதிகாரி ராமலிங்கம் சௌந்தரராஜன் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.